சிவ கீதை அத்தியாயம் 4 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்

ஸ்ரீ இராமர் செய்த சிவ உபாசனாவிதியும், சாக்ஷாக்காரமும் இதில் ஸ்ரீ இராமர் மேற்கொண்ட மகாபாசுபதவிரதமும், கோதாவரி நதி அருகே லிங்கம் அமைத்து சிவ பூஜைகள் செய்த விரதமும் இராமரின் விரதபலத்தால் இறைவன் ஐந்துமுகமாக பராக்கிரமகாட்சி தந்ததும் குறிப்பிடப்படுகின்றது.
*****
"ஏவமுக்த்வா முநிஸ்ரேஷ்டே கதேதஸ்மிந் நிஜாஸ்ரமம்| அத ராமகிரெளராம: புண்யே கோதாவரீ தடே||" (1)

"ஷிவலிங்கம் பரதிஷ்டாப்ய க்ருத்வா தீக்ஷாம் யதாவிதி| பூதி பூஷித ஸர்வாங்கோ ருத்ராக்ஷாபரணைர் யுத:||" (2)

"அபிஷிச்ய ஜலை: புண்யைர் கௌதமீ ஸிந்து ஸம்பவை:| அர்ச்சயித்வா வந்யபுஷ்பைஸ் தத்வத் வந்ய பலைரபி|| (3)

"பஸ்மச்சந்நோ பஸ்மஸாயீ வ்யாக்ர சர்மாஸநேஸ்தித:| நாம்நாம் ஸஹஸ்ரம் ப்ரஜபந்நக்தம் திவம் அநநயதீ:||" (4)

"மாஸமேகம் பலாஹாரோ மாஸம் பர்ணாஷநஸ்தித:| மாஸமேகம் ஜலாஹாரோ மாஸம் ச பவ நாஷந:||" (5)

"ஷாந்தோ தாந்த: ப்ரஸந்நாத்மா த்யாயந்நேவம் மஹேஸ்வரம்| ஹ்ருத் பங்கஜே ஸமாஸீநம் உமா தேஹார்ததாரிணம்||" (6)

"சதுர்புஜம் த்ரிநயனம் வித்யுத்பிங்க ஜடா தரம்| கோடி ஸுர்ய ப்ரதீகாஷம் சந்த்ர கோடி ஸுஷீதலம்||" (7)

"ஸர்வாபரண ஸம்யுக்தம் நாகயக்ஞோபவீதிநம்| வ்யாக்ர சர்மாம்பரதரம் வரதாபய தாரிணம்||" (8)

"வ்யாக்ர சர்மோத்தரியம்ச ஸுராஸுர நமஸ்க்ருதம்| பஞ்ச வக்த்ரம் சந்த்ர மௌளிம் த்ரிஷூல டமரூதரம்||" (9)

"நித்யம் ச சாஸ்வதம் ஸுத்தம் த்ருவமக்ஷரமவ்யயம்:| ஏவம் நித்யம் ப்ரஜபதோ கதம் மாஸ சதுஷ்டயம்||" (10)

"அதஜாதோ மஹாந்நாத: ப்ரளயாம் புதிபீஷண:| ஸமுத்ர மதநோத்பூத மந்தராவநி ப்ருத்வநி:|| (11)

"ருத்ர பாணாக்நி சம்தீப்த ப்ரஷ்யத் த்ரிபுரவிப்ரம:| தமா கர்ண்யாத ஸம்ப்ராந்த: யாவத் பர்யேதி புஷ்கரம்|| (12)

பொருள்:
அத - பிறகு; ப்ரளயாம்புதிபீஷண: - பிரளய காலத்து சமுத்திரம் போல பயங்கரமான; ஸமுத்ர மதநோத்பூத - சமுத்திரத்தை கடையும்போது; மந்தராவநி ப்ருத்வநி:- மந்தர மலையில் உண்டான ஓசை போன்ற; ருத்பாணாக்நி - ருத்ரருடைய பாணத்திலிருந்தும் கிளம்பிய அக்னியால்; சந்தீப்த பிரஷ்யத் - கொளுத்தப்பட்டு நழுவும்; த்ரிபுர விப்ரம:- திரிபுரம் போன்று பிரமையை உருவாக்கும்; மஹாந் நாத:- பெரிய சப்தம்; ஜாத: ஏற்பட்டது; அத பிறகு; தம் - அந்த சப்தத்தை; ஆகர்ண்ய - கேட்டு; சம்பராந்த: கலங்கியவராக (ராமர்); யவத் புஷ்கரம் - புஷ்கரம் இருக்கும் இடத்தை; பர்யேதி - விரைந்தார்.

கருத்து:
நான்கு மாதங்கள் ஆனதும் ஒரு பெரிய சப்தம், புஷ்கரணி அருகில் ஏற்பட்டது. சமுத்திரத்தை கடையும்போது மந்தரமலையில் உண்டானது போன்றும், ருத்ரருடைய பாணர்க்னியால் முப்புரங்கள் கொளுத்தப்பட்டு அவை கீழே
விழுகிறதோ என்று நினைக்கத்தக்க அளவினதுமான அந்த ஓசையைக் கேட்டுக் கலங்கிய ராமர் ஓசை வந்த திசையை நோக்கிப் போனார்.

"தாவதேவ மஹாதேஜோ ராமஸ்யாஸீத் புரோத்விஜா:| தேஜஸா தேந ஸம்ப்ராந்தோ நாபஷ்யத் ஸத்திஷோதஷ||" (13)

பொருள்:
த்விஜா:- அந்தணர்களே; ராமஸ்ய - ராமருக்கு; எதிரில்; தாவத் ஏவ அவ்வளவிலேயே; மஹா தேஜ: பெரிய ஒளி; ஆஸீத் - ஏற்பட்டது; தேந தேஸா ஒளியால்; ஸம்ப்ராந்த: கலக்க முற்றவராக ; ஸ; (ராமர்); தஷதிஷ - பத்து திசைகளையும்; ந அபஷ் காணவில்லை.

கருத்து:
ராமருக்கு எதிரே ஒரு பேரொளி ஏற்பட்டது. ஒளியில் கலங்கிய ராமர் திக்குத் திசைகளை அறியாத பிரமித்தார்.

"அந்தீக்ருதேக்ஷணஸ்த்தூர்ணம் மோஹம் யாதோ ந்ருபாத் மஜ:| விசிந்த்ய தர்க்கயாமாஸ தைத்ய மாயாம் த்விஜேஷ்வரா:II" (14)

பொருள்:
தூர்ணம் - உடனே; அந்தீக்ருதேக்ஷண - ஒன்றையும் பார்க்க முடியாமல்;மோஹம் யாத: - மயக்கம் அடைந்து: ந்ருபாத்மஜ: - அரசகுமாரரான ராமர்; விசிந்த்ய - யோசித்து; த்விஜேஷ்வரா -  அந்தணர்களே; தைத்யமாயாம் - அரக்கரது மாயை என்று; தர்க்கயாமாஸ - எண்ணினார்.

கருத்து:
ராமர் அந்தப் பேரொளியால் ஒன்றையும் பார்க்க முடியாது ஆச்சர்யமடைந்து, "இது அரக்கரது மாயையாக இருக்கும்" என்று எண்ணினார். 

"அதோத்தாய மஹாவீர: ஸஜ்யம் க்ருத்வா தணுஸ்ஸ்வகம்| அவித்யந் நிஸ்தைர் பாணைர் திவ்யாஸ்த்ரைர் அபிமந்த்ரித:II" (15)

பொருள்:
அத - பின்னர்; உத்தாய - எழுந்து; மஹாவீர - மஹாவீரராகிய ராமர், ஸ்வகம் தனு: - தன்னுடைய வில்லை; ஸஜ்யம் க்ருத்வா - நாணேற்றி; திவ்யாஸ்த்ரை: - திவ்யமான அஸ்திரங் களால்; அபிமந்த்ரிதை : அபி மந்திரிக்கப்பட்ட; நிசிதை: - கூர்மையான; பாணை: பாணங்களை; அவித்யத் - எய்தார்.

கருத்து:
மகாவீரராகிய ராமர் எழுந்து தன் வில்லை வளைத்து திவ்யா ஸ்திரங்களால் அபிமந்திரிக்கப்பட்ட கூர்மையான பாணங்களை எய்தார்.

விளக்கம் :
அஸ்திரம் என்று கூறுவது வேறு, சஸ்திரம் என்று கூறுவது வேறு. சஸ்திரம் என்றால் ஆயுதப் பிரயோகம் செய்வது . வில்லை வளைத்து அம்பு தொடுத்தால் அது சஸ்திரம். அதிலேயே மந்திரம் ஜபித்து விடும்போது அது அஸ்திரம். நாகாஸ்திரம், பிரம்மாஸ்திரம் என்று கூறுவது இந்த முறையில் எய்வது.

சமயத்தில் வில்லோ அம்போ இல்லாமல்கூட அஸ்திர மந்திரத்தைப் பிரயோகம் செய்ய முடியும். சீதா தேவியை, காகாசுரன் துன்புறுத்தியபோது, கோபம் கொண்ட ராமர், அருகிலிருந்த புல்லை எடுத்து பிரம்மாஸ்திரம் ஜபித்து எய்தார். புல் பிரம்மாஸ்திரமாகி, காகாசுரனைத் துரத்தியது . காகமாக உருமாறி வந்தவன், உண்மையில் இந்திரன் மகன். அவன் அடைக்கலம் தேடி ஓடினான். மூவுலகங்களுக்கும் ஓடினான். எங்கும் அவனை பிரம்மாஸ்திரம் துரத்தியது. யாரும் அடைக்கலம் தரவில்லை. இறுதியில் குற்றுயிராக ஸ்ரீ ராமரிடமே வந்து வீழ்ந்தான்.ராமரும் மன்னித்து அஸ்திரத்துக்கு இலக்காக ஒரு கண்ணை மட்டும் பறித்துக் கொண்டு அவனை உயிரோடு விட்டார். அதனால் இன்னும், காகத்துக்கு ஒரு கண் பார்வைதான் உண்டு. ஒரு
கண்ணால் பார்ப்பதால்தான் அது தலையை சாய்த்துக் கொண்டு பார்க்கும். இது நடந்தது சில காலத்துக்குமுன் சீதாதேவியும் ராமரும் வனவாஸத்தில் ஒன்றாக இருந்தபோது.

"ஆக்நேயம் வாருணம் ஸௌம்யம் மோஹநம் ஸௌர பார்வதம்| விஷ்ணுசக்ரம் மஹாசக்ரம் காலசக்ரம் ச வைஷ்ணவம்||" (16) 

"ரௌத்ரம் பாசுபதம் ப்ராஹ்மம் கௌபேரம் குலிசாநிலம்| பார்கவாதி பஹுந்யஸ்த்ராண்யம் ப்ராயுங்த ராகவ||" (17)

பொருள்:
அயம் ராகவ: - இந்த ராமர்; ஆக்னேயம் - அக்னி அஸ்திரம்; வாருணம் - வருண அஸ்திரம்; ஸௌம்யம் - சந்திர அஸ்திரம்; மோஹநம் - மோஹனாஸ்திரம்; ஸௌரம் - சூரிய அஸ்திரம்; பாவதம் பர்வதாஸ்திரம்; விஷ்ணுசக்ரம் - விஷ்ணு சக்கரம்; மஹா சக்ரம் - மஹா சக்கரம்; கால சக்ரம் - கால சக்கரம்; வைஷ்ணவம் - விஷ்ணு அஸ்திரம்; ரௌத்ரம் - ருத்ர அஸ்திரம்; பாசுபதம் - சிவ அஸ்திரம்; பிராம்மம் - பிரம்ம அஸ்திரம்; கௌபேரம் குபேர அஸ்திரம்; குலிசாநிலம் - வஜ்ராஸ்திரம், வாயு அஸ்திரம்; பார்கவாதி பஹுநி பார்க்க வாஸ்திரம் முதலிய பல; அஸ்த்ரானி ப்ராயுங்த -பிரயோகித்தார்.  

கருத்து:
இந்த ராமர் ஆக்னேயாஸ்திரம், வருணாஸ்திரம், சந்தி ராஸ்திரம், மோஹனாஸ்திரம், சூரியாஸ்திரம், பர்வதாஸ்திரம், விஷ்ணு சக்கரம், மஹா சக்கரம், கால சக்கரம், விஷ்ணு அஸ்திரம். ருத்ராஸ்திரம், சிவாஸ்திரம், பிரம்மாஸ்திரம், குபேராஸ்திரம், வஜ்ராஸ்திரம், வாயுவாஸ்திரம், பார்கவாஸ் திரம் முதலிய பல அஸ்திரங்களைப் பிரயோகித்தார்.

"தஸ்மிந் தேஜஸி ஸஸ்த்ராணி சாஸ்த்ராண்யஸ்ய மஹீபதே:| விலீநாநி மஹாக்ரஸ்ய கரகாயிவ நீரதெள||" (18)

"தத: க்ஷணேந ஜஜ்வால தநுஸ்தஸ்ய கராச்யுதம்| தூணீரம் சாங்குளித்ராணம் கோதிகாபி மஹீபதே:||" (19)

பொருள்:
தஸ்மிந் - அந்த; தேஜஸி - ஜோதியில்; அஸ்ய - இந்த; மஹீபதே - மன்னனுடைய; ஸஸ்த்ராணி - ஆயுதங்களும்; அஸ்த்ராணிச - அஸ்திரங்களும்; நீரதெள - சமுத்திரத்தில் மஹாப்ரஸ்ய - பெரிய மேகத்தினுடைய; கரகா: இவ மழைத்துளிகள்போல; விலீநாநி - ஒடுங்கிவிட்டன; தத: பின்னர்; க்ஷணேந - நொடியில்; தஸ்ய மஹீபதே:- அந்த அரசனுடைய; தனு : வில்லும்; தூணிரம் - அம்பறாத் தூணியும்; அங்குளித்ராணம் - விரல் மூடியும்; கோதிகா அபி உடும்புத்தோலும் ; கராத் - கையிலிருந்து; சயுதம் - நழுவிய தாக; ஜஜ்வால - ஜொலித்தது.

கருத்து:
அந்த ஜோதியில் ராமர் போட்ட ஆயுதங்களும் அஸ்திரங் களும், சமுத்திரத்தில் விழுந்த மழைத் துளிகள்போல ஒடுங்கிவிட்டன. மேலும் ஒரு நொடி நேரத்திற்குள் அவரது வில், அம்பறாத் தூணி, உடும்புத் தோல், விரல் மூடி அனைத்தும் கையிலிருந்தும் ஜொலித்தபடி நழுவியது.

தத் த்ருஷ்ட்வா லக்ஷ்மணோ பீத: பபாத புவி மூர்சித:1 அதா கிம்சித் கரோராம: ஜானுப்யாமவநீம் கத:|I

மீலிதாக்ஷோ பயாவிஷ்ட: ஷம்கரம் ஷரணம் கத:

ஸ்வரேணாப்யுச்சரந்நுச்சை: ஷம்போர் நாம ஸஹஸ்ரகம்| 21

ஷிவம்ச தண்ட வத் பூமௌ ப்ரணநாம் புன: புன:

பொருள்:

தத் - அதனை; த்ருஷ்ட்வா - பார்த்து: லக்ஷ்மண: - லட்சு மணர்; பீத: - பயந்தவராக; மூர்சித: - மூர்ச்சித்து; புவி பூமியில்; பபாத விழுந்தார்; அத பிறகு; ராம: ராமர்; அகிஞ்சித்கர:- ஒன்றும் செய்ய முடியாதவராக; ஜானுப்யாம் முழந்தாள்கள் (படிய ); அவநீம் கத: பூமியை அடைந்து; பயாவிஷ்ட:- பயங்கொண்டவராக; மீலிதாக்ஷ:- கண்களை மூடிக் கொண்டு; ஷம்கரம் சங்கரரை; ஷரணம் கத: சரணமடைந்தார்; ஷம்போ:- சிவபெருமானுடைய; நாம்

Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்