சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்
"ஜீவகத்தியாதி, உபாசனாமார்க்க யோகம் - தேகத்தைப் பற்றிய பேதங்களும், சொர்க்கம், நரகம் போன்ற தத்துவங்களும் விளக்கப்படுகின்றது. கர்மமே அவரவர் பிறவிக்கு காரணம் என்பது வலியுறுத்தப்படுகின்றது. ஆனந்தத்தின் தன்மையும், ஞானிகளின் மேன்மையும் விளக்கப்படுகின்றது"
*****
சிவ உவாச:
"தேஹாந்தா கதிம் தஸ்ய பரலோக கதிம் ததா| வக்ஷ்யாமி ந்ருபஷார்தூல மத்த: ஷ்ருணு ஸமாஹித:||" (1)
பொருள்:
ந்ருபஷார்தூல - அரசசிரேஷ்டனே;
தஸ்ய - அதனுடைய (ஜீவனுடைய); தேஹாந்தர கதிம் - உடலைவிட்ட பிறகு ஏற்படும் கதியையும்;
பரலோக கதிம் - வேறு உலகம் செல்லுவதையும்;
வக்ஷ்யாமி - கூறுகிறேன்;
மத்த: - என்னிடமிருந்து;
ஸமாஹித: - நன்கு;
ஷ்ருணு - கேட்டறிவாயாக.
கருத்து:
அரசரரில் சிறந்த ராமா, ஜீவன் அந்த உடலை விட்ட பிறகு ஏற்படும் கதியையும், வேறு உலகம் செல்லுதலையும் பற்றிக் கூறுகிறேன். நன்கு கேட்டுத் தெரிந்து கொள்வீராக.
"புக்தம் பீதம் யதஸ்த் யத்ர தத்ர ஸாதாம பந்தநம்| ஸ்தூல தேஹஸ்ய லிங்கஸ்ய தேந ஜீவந தாரணம்||" (2)
பொருள்:
யத:- எதனால்;
புக்தம் - சாப்பிடப்பட்டதோ;
பீதம் - அருந்தப்பட்டதோ;
தத்ரஸாத் - அந்த அன்னரச் சாரத்தால்; ஸ்தூல தேஹஸ்ய - ஸ்தூல தேகத்திற்கும்; லிங்கஸ்ய - லிங்க தேகத்திற்கும்; ஆம்பந்தநம் - நூதனமான பற்று;
தேந - அதனால்;
ஜீவநதாரணம் - பிராணன் இருக்கிறது.
கருத்து:
ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ, எதை அருந்துகிறானோ, அவற்றின் சாரமான சக்தியினால் கண்ணுக்குத் தெரியும் அவனது உடலுக்கும் (ஸ்தூல உடல்) கண்ணுக்குத் தெரியாத அவனது உடலுக்கும் (சூட்சும உடல்) புதிது புதிதான பற்று ஏற்படுகின்றது. அதனால் உடலில் பிராணன் நிலைபெற்றிருக்கிறது.
விளக்கம் :
உடல் என்று நாம் கூறுகின்ற சரீரம் மூன்று வகைப் படும். 1. ஸ்தூல சரீரம், 2. சூட்சும சரீரம், 3. காரண சரீரம்
ஸ்தூல சரீரம்:-
நாம் பார்க்கின்ற நமது உடல். கண், காது, மூக்கு, கை, கால் என்ற உறுப்புக்கள் அடங்கியதும்,உயரம், நிறம், பருமன் என்பவையெல்லாம் கொண்டதுமான இந்த உடல் ஸ்தூல சரீரம் எனப்படும்.
சூட்சும சரீரம்:-
இது கண்ணுக்குத் தெரியாது. இதை லிங்க சரீரம் என்றும் கூறுவார்கள்.
1. நம்முடைய செவியும் - கேட்கும் தன்மையும்,
2. நம்முடைய கண்ணும் -பார்க்கும் தன்மையும்,
3. நம்முடைய நாக்கும் சுவை உணரும் தன்மையும்,
4. நம்முடைய மூக்கும் - முகரும் தன்மையும்.
5. நம்முடைய தோலும் - தொடு உணர்ச்சித் தன்மையும்.
6. நம்முடைய கைகளும் - ஒன்றைச் செய்யும் தன்மையும்,
7. நம்முடைய கால்களும் ஓடுவதுமான தன்மையும். நடப்பதும்,நிற்பதும்.
8. நம்முடைய வாயும் -பேசும் தன்மையும்.
9. நம்முடைய குதமும் தன்மையும், மலஜலங்களைக் கழிக்கும் தன்மையும்
10. நம்முடைய மர்மஸ்தானமும் - சிறுநீர், சுக்லம், சோணிதம் இவைகளை விடுத்து ஆனந்தம் அடைவிக்கும் தன்மையும்,
பஞ்ச பிராணன்கள்:-
11. இதயஸ்தானத்திலிருந்தபடி மூக்கின் வழியாக சுவாசித்து பசி தாகங்களை ஏற்படுத்துவதும், சாப்பிட்ட உணவை ஜீரணிக்கச் செய்வதுமான "பிராண வாயுவும்",
12. குதத்தைப் பற்றி நின்று மல மூத்திரங்களையும், ரேதஸ்ஸையும் வெளியில் தள்ளும் "அபான வாயுவும்",
13. கழுத்துப் பகுதியில் இருந்தபடி, சாப்பிட்டதை விழுங்கும்படி செய்வதும், உணவின் சாரத்தை நாடிகளுக்குள் வியாபிக்கச் செய்வதும், சப்தத்தோடு கலந்து குரலோசை எழுப்புவதுமான "உதான வாயுவும்",
14. நாபி ஸ்தானத்திலிருந்து, உதான வாயுவால் அனுப்பப் பட்ட உணவின் ரசத்தை நாடிகளுக்கு சமமாக அனுப்பும் "சமான வாயுவும்",
15. உடல் முழுவதும் வியாபித்து, தொடுவதை உணரச் செய்வதும், சாப்பிட்ட உணவை சக்கை வேறு சாறு வேறாக்குவதுமான வேலையைச் செய்யும் "வியான வாயுவும்",
16.மனமும்
17.புத்தியும்
ஆகிய பதினேழும் சேர்ந்ததற்கு சூட்சும சரீரம் என்று பெயர். இச்சரீரம் கண்களுக்குப் புலப்படாததாக, கைகளால் தொட்டுணர முடியாததாக, நமது உடலுக்குள்ளேயே, அதாவது ஸ்தூல சரீரம் எனப்படும் நமது உடலுக்குள்ளேயே இருப்பது.
காரண சரீரம்:
அஞ்ஞானமே காரண சரீரம். பிறப்புக்கும், இறப்புக்கும், சுகத்துக்கும், துக்கத்துக்கம் இதுவே காரணம். நம்முடைய உடல் (ஸ்தூல சரீரம்) சாப்பாடு இல்லா விட்டால் அழிந்து போகும்; வயோதிகம் ஏற்பட்டால் அழிந்து போகும்; வியாதியினாலும் அழிந்து போகும்.
மேலே குறிப்பிட்டுள்ள 27 அம்சங்கள் சேர்ந்த சூட்சும சரீரமானது காமம், குரோதம், துவேஷம், பாசம் முதலான வற்றால் வளரும். அவை அழிந்தால் சூட்சும சரீரம் அழியும்.
காரண சரீரமானது, நான், எனது என்னும் எண்ணங்களால் நாளுக்கு நாள் வளரும். அவை அழிந்தால் அதுவும் அழியும்.
காரண சரீரமும், சூட்சும சரீரமும் அழிந்தால்தான் முக்தி கிட்டும்.
மேற்படி ஸ்லோகத்தில் பகவான் உண்ணும் உணவினாலும், பருகும் பானத்தாலும், ஒருவனது ஸ்தூல் உடலுக்கும், சூட்சும உடலுக்கும் புதிது புதிதாக பற்று ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்கிறார்.
உண்ணும் உணவினாலேயே, நம்முடைய இந்த உடல் உயிரோடு ஒட்டியிருக்கிறது என்பதையும் கூறுகிறார்.
"வ்யாதிநா ஜரயாவாபி பீட்யதே ஜாடரோநல:| ஷ்லேஷ்மணா தேந புக்தாந்நம் பீதம்வரநபசத்யலம்|| (3)
பொருள்:
வ்யாதிநா - நோயினாலாவது; ஜரயா வா முதுமையினாலாவது; ஷ்லேஷ்மணா கபத்தாலாவது; ஜாடா: - வயிற்றிலுள்ள; அநல: - அக்னியானது; பீட்யதே - பீடிக்கப் படுகிறது; தேந - அதனால்; புக்தாந்நம், பீதம்வா - சாப்பிட்ட தும், அருந்தியதும்; அலம் ந பசதி - போதுமானபடி ஜீரண மாவதில்லை.
கருத்து:
நோயினாலாவது, முதுமையினாலாவது, கபத்தாலாவது. வயிற்றிலுள்ள அக்னியானது அடக்கப்படுகின்றது. அதனால் சாப்பிட்டதும், அருந்தியதுமான உணவு போதுமானபடி ஜீரணிக்காது.
விளக்கம் :
நமது வயிற்றில் ஜாடராக்னி என்று ஒரு அக்னி இருக்கிறது. நாம் சாப்பிட்ட உணவை அந்த அக்னிதான் பக்குவப் படுத்தி ஜீரணமாக்குகிறது. முதுமையிலும், நோய்வாய்ப்பட்ட காலத்திலும், கபம் அதிகரித்திருக்கும் போதும் அந்த அக்னி அடங்கியதாகிவிடும். எனவே ஜீரணத்தன்மை குறைந்து விடும். எவ்வளவுக்கு எவ்வளவு ஜாடராக்னி அடங்கி விடுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஜீரணமாகாது; பசி ஏற்படாது.
"புக்த பீத ரஸா பாவாத் ததா ஷுஷ்யந்தி தாதவ:| புக்த பீத ரஸேநைவ தேஹேலிம்பந்தி வாயவ:|| (4)
பொருள்:
புக்த பீத ரஸா பாவாத் - சாப்பிட்டதும், அருந்தியதுமான உணவு ரசமாக்கப்படாததால்; ததா - அப்போது; தாதவ: தாதுக்கள்; சுஷ்யந்தி - வற்றிப் போகின்றன; தேஹே உடலில்; புக்த பீதர ஸேநைவ - அன்னபான ரசத்தினா லேயே; வாயவ: - வாயுக்கள்; லிம்பந்தி - தாது விருத்தி செய் கின்றன.
கருத்து :
அன்னபானங்கள், ரசமாக்கப்படாததால் தாதுக்கள் வற்றிப் போகின்றன. உடலில் அன்னபான ரசத்தினாலேயே வாயுக்கள் தாது விருத்தி செய்கின்றன.
*****19.5.2024
"ஸமீகரோதி யத்தஸ்மாத் ஸமாநோ வாயு ருச்யதே| ததாநீம் தத்ர ஸாபாவாத் ஆம்பந்த ந ஹாநித:II" (5)
"பரிபக்வரஸத்வேந யதா கௌரவத: பலம்| ஸ்வயமேவ பதத்யாஷு ததா லிங்கம் தநோர் வ்ரஜேத்||" (6)
பொருள்:
யத்- யாதொரு காரணத்தால்; ஸமீகரோதி - அன்னபான ரசத்தை நாடிகளில் செலுத்துகின்றதோ; தஸ்மாத் - அந்த காரணத்தால்; ஸமாந: வாயு: சமான வாயு என்று; உச்யதே - கூறப்படுகிறது; ததாநீம் - அப்போது; தத் ரஸாபாவாத் அன்னபான ரசமில்லாததால்; ஆம பந்தன ஹாநித: அஜீரணம் ஏற்பட்டு; யதா - எப்படி;பலம் பழமானது; பரிபக் வாஸத்வேந - பரிபக்குவமாகி; கௌரவத: - கனத் தால் (விழுகின்றதோ); ததா - அப்படி; ஆஷு - சீக்கிரமாக; ஸ்வயமேவ - தானாகவே; பததி - விழுகின்றது; லிங்கம் சூட்சும உடல்; தநோ - உடலிலிருந்து (ஸ்தூல உடல்) வ்ரஜேத்- வெளியேறுகின்றது.
கருத்து:
அன்னபான ரசங்களை சமமாக நாடிகளில் செலுத்துகின்ற வாயு, அது சமானமாக செலுத்துவதாலேயே "சமான வாயு" என்று கூறப்படுகிறது.
ஆஜீரணம் ஏற்படும்போது அன்னபான ரசங்கள் கிடைக்காமல் போவதால், பழுத்த பழம் தானாகவே மரத்திலிருந்து விழுவதுபோல, உடலிலிருந்தும் சூட்சும உடல் வெளியேறுகின்றது.
"தத் தத் ஸ்தாநாதபாக்ருஷ்ய ஹ்ருஷீகாணாம்ச வாஸநா:| ஆத்யாத்மிகாதிபூதாநி ஹ்ருத்பத்மே சைசுதாம் கத:||" (7)
"ததோத்வக: ப்ராண வாயு ஸம்யுக்தோ நவவாயுபி:| ஊர்த்வோச் ச்வாஸீ பவத்யேஷ ததா தேநைக தாம் கத:||" (8)
பொருள்:
தத்தத்ஸ்தாநாத் - அதனதன் இடத்திலிருந்து; ஹ்ருஷீ காணாம் - இந்திரியங்களின்; வாஸநா:வாசனைகளையும்: ஆத்யாத்மிகாதி பூதாநி - ஆத்யாத்மிகம் முதலான பூதங்களை யும்; அபாக்ருஷ்ய - ஆகர்ஷித்துக் கொண்டு; ஹ்ருத் பத்மே- இதயகமலத்தில்; ஏகதாம் கத: - ஒன்றாகி விடுகின்றது; தத:- பிறகு; ப்ராணவாயு பிராண வாயுவானது; அத்வக: வெளிப்படுவதற்குத் தயாராகி; நவவாயுபி -மற்ற ஒன்பது வாயுக்களோடும்; ஸம்யுக்த: - சேர்ந்து கொண்டு; ஊர்த் வோச்ச்வாஸீ - மேல்நோக்கிய சுவாசம் உடையதாகின்றது; ஏஷ:- அந்த ஜீவன்; ததா - அப்படியுள்ள; தேந - அந்த பிராண வாயுவோடு; ஏகதாம் கத: - கூடியவனாகிறான்.
கருத்து:
ஜீவன், அதனதன் இடத்திலிருந்து இந்திரியங்களின் வாசனைகளையும், அத்யாத்மிகம் முதலானவற்றையும் ஆகர்ஷித்துக் கொண்டு இதயகமலத்தில் ஒன்றாகிவிடு கின்றது. பிறகு பிராண வாயுவானது, வெளிப்படுவதற்குத் தயாராகி மற்ற ஒன்பது வாயுக்களோடும் சேர்ந்து கொண்டு மேல்நோக்கிய சுவாசம் உடையதாகின்றது. அந்த ஜீவன், இப்படியான பிராண வாயுவோடு கூடியவனாகின்றான்.
*****21.5.2024
"சக்ஷுஷோர்வாபி மூர்த்நோவா நாடீமார்கம் ஸமாஷ்ரித| வித்யாகர்ம ஸமாயுக்தோ வாஸநாபிஷ்ச ஸம்யுத:||" (9)
"ப்ராஜ்ஞாத்மாநம் ஸமாஷ்ரித்ய விஞ்ஞாநாத்மோ பஸர்பதி|"
பொருள்:
விஞ்ஞாநாத்மா விஞ்ஞானாத்மா: வித்யா கர்ம ஸமாயுக்த:- வித்தை, கர்மவினை முதலியவைகளோடும்; வாஸநாபிஷ்ச -அனுபவித்த விஷயங்களின் தொடர்பு களோடும்; ஸம்யுத:-கூடியவனாய்; ப்ராஜ்ஞாத் மாநம் விழிப்பு நிலையில் உள்ள ஆத்மாவை; ஸமாஷ்ரித்ய பற்றிக் கொண்டு; நாடீமார்க ஸமாஷ்ரித-நாடிகளின் வழி யாகச் சென்று; சக்ஷுஷோர்வா - கண்களின் வழியாகவாவது; அத மூர்தந: வா தலை வழியாகவாவது; உபஸர்பதி - செல்லுகின்றான்.
கருத்து:
விஞ்ஞானாத்மா, கற்றவித்தை, செய்த கர்வினை முதலியவைகளோடும், தான் அனுபவித்த விஷயங்களில் எஞ்சி நிற்கும் பதிவுத் தொடர்புகளோடும் கூடியவனாக, விழிப்பு நிலையில் உள்ள ஆத்மாவைப் பற்றிக் கொண்டு, நாடிகளின் வழியை அடைந்து, கண்களின் வழியாகவாவது, தலை வழியாகவாவது செல்லுகின்றான்.
விளக்கம் :
இரண்டற்றதான ஆத்மநிலைக்கு விஞ்ஞானாத்மா என்று பெயர்.
"யதா கும்போ நீயமாநோ தே ஷாத்தே ஷாந்தரம் ப்ரதி||" (10)
"கபூர்ண ஏவ ஸர்வத்ர ஸக்ரகாஷாபி தத்ரது:| கடாகாஷாக் யதாம் யாதி தத்வல்லிங்கம் பராத்மந:||" (11)
"புநர்தேஹாந் தரம்யாதி யதா கர்மாநுஸாரத:| ஆமோக்ஷாத் ஸஞ்சரத் யேவம் மத்ஸ்யகூலத்வயம்||" (12)
பொருள்:
யதா - எப்படி;தேஷாத் - ஓரிடத்திலிருந்து; தேஷாந் தரம் ப்ரதி - மற்றோரிடத்துக்கு; நீயமாந: - கொண்டு போகப் படும்; கும்ப- குடமானது; ஸர்வத்ர - எங்கும்; கபூர்ண: ஏவ ஆகாச பூர்ணமாகவே (உள்ளதோ); தத்ர - அதிலுள்ள; ஆகாஷ: து - ஆகாசமோ என்றால்; கடாகா ஷாக்யதாம் குடாகாசம் என்னும் பெயர்; யாதி - பெறுகின்றதோ; தத்வத் அதுபோல; லிங்கம் சூட்சும சரீரம், பராத்மந: - பராத்மா வின்; யதாகர்மாநுஸாரத -கர்மவினைக்குத் தக்கபடி;புந:- மீண்டும்; தேஹாந்தரம் - வேறு உடலை (ஸ்தூல உடல்) யாதி - அடைகின்றது; யதா - எப்படி; மத்ஸ்ய: - மீன்; கூலத் வயம் - இரு கரைகளையும்; ஏவம் - இவ்வாறு; ஆமோஷாத் மோட்சம் வரையில்; ஸஞ்சரதி - சஞ்சரிக்கின்றது.
கருத்து:
ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குக் கொண்டு போகப்படும் குடமானது எங்கும் ஆகாச பூர்ணமாகவே உள்ளது. அதிலுள்ள ஆகாசம் குடாகாசம் என்றே பெயர் பெறுகின்றது. அதுபோல சூட்சும சரீரம் பராத்மாவின் கர்ம வினைக்குத் தக்கபடி மீண்டும் வேறு உடலை (ஸ்தூல உடலை) அடைகின்றது. மீன் நதியில் இக்கரைக்கும், அக்கரைக்குமாக சஞ்சரிப்பதுபோல் ஜீவன் மோட்சம் வரையில் சஞ்சரிக்கிறது.
விளக்கம்:
ஒரு குடம் காலியாக இருக்கிறது. அதை குடாகாசம் என்கிறோம். குடத்தை வேறு ஓர் இடத்திற்குக் கொண்டு போய் வைக்கிறோம். அதனால் குடாகாசத்துக்கு என்ன நேர்ந்துவிடும்? ஒன்றும் இல்லை. இடம் மாறினாலும் குடா காசம் குடாகாசமாகவேதான் இருக்கும்.
அதுபோல ஜீவனின் கர்மவினைக்கு ஏற்ப சூட்சும சரீரம் மீண்டும் வேறு ஒரு ஸ்தூல உடலை ஏற்கிறது.
மீன் நதியில் இக்கரைக்கும் அக்கரைக்குமாக நீந்திக் கொண்டிருக்கும். அதைப் போல, மோட்சம் அடைகின்ற வரையிலும் ஜீவன், பிறப்பு, மரணம், மீண்டும் பிறப்பு என்றே இருக்கிறது.
"பாப போகாய சேத் கச்சேத் யமதூதைரதிஷ்டித| யாதநா தேஹமாஷ்ரித்ய நரகாநேவ கேவலம்||" (13)
பொருள்:
பாப்போகாயசேத் - பாபத்தின் பயன் அனுபவிப்பதாயின்; யாதநாதேஹம் - யாதநா சரீரம், ஆஷ்ரித்ய - பற்றிக கொண்டு; யம தூதை: - யம தூதர்களால்; அதிஷ்டித: - அடக்கப்பட்டவனாக ; கேவலம் நரகாந் ஏவ - நரகங்களை மட்டுமே; கச்சேத் - அடைவான்.
கருத்து:
ஜீவன், பாபத்தின் பலனை அனுபவிக்க வேண்டியிருந்தால், யாதனா சரீரம் என்னும் காற்று வடிவமான சரீரத்தைப் பெற்று, யம தூதர்களால் அடக்கப்பட்டவனாக நரகங்களை மட்டுமே அடைவான்.
*****29.5.2024
"இஷ்டபூர்தாதி காமாணி யோநுதிஷ்டதி ஸர்வதா| பித்ருலோகம் வ்ரஜத்யேஷ தூத மாஷ்ரித்ய பர்ஹிஷ:||" (14)
"தூமம் ராத்ரிம் தத: க்ருஷ்ண பக்ஷம் தஸ்மாச்சதக்ஷிணம்| அயநம் ச ததோ லோகம் பித்ருணாம் ச தத: பரம்||" (15)
"சந்தர லோகே திவ்ய தேஹம் ப்ராப்ய புங்க்தே பராம் ஷரியம்|"
பொருள்:
ய: யாதொருவன்; ஸர்வதா - எப்போதும் ; இஷ்ட பூர்தாதி கர்மாணி - யாகம், குளம் வெட்டுதல் முதலான நற் கருமங்களை; அநுதிஷ்டதி - அனுஷ்டிக்கின்றானோ; ஏஷ: இவன்; பர்ஹிஷ: - அக்னியை ஹேது வாய்க் கொண்டு; யமதூதமாஷ்ரித்ய - யமதூதரைப் பின்பற்றி; பித்ரு லோகம் பித்ருலோகத்தை; வ்ர ஜதி - அடைகின்றான்; தூமம் தூம் தேவதை; ராத்ரிம் - ராத்திரி தேவதை; தத: - பின்னர்; க்ருஷ்ணபக்ஷம் -கிருஷ்ண பட்சதேவதை; தஸ்மாச்ச அதன்பிறகு; தக்ஷிணம் அயநம் - தட்சிணாயன தேவதை; தத:- அதன் பிறகு; பித்ருணாம் - பித்ருக்களுடைய; லோகம் - உலகம்; சந்த்ர லோகே - சந்திரலோகத்தில்; திவ்ய தேஹம் - திவ்ய உடல்; ப்ராப்ய - பெற்று; பராம் ஷ்ரியம் - பெரும் சுகத்தை; புங்க்தே - அனுபவிக்கின்றான்.
கருத்து:
எப்போதும் யாகம் செய்தல், குளம் வெட்டுதல் போன்ற நற்கருமங்களைச் செய்த ஜீவன் இறுதியில், அவன் பூஜித்த அக்னியை ஹேதுவாய்க் கொண்டு, யமதூதரைப் பின்பற்றி பித்ரு லோகத்தை அடைகிறான். தூமதேவதை, ராத்திரி தேவதை, கிருஷ்ண பட்சதேவதை, தட்சிணாயன தேவதை இவர்களை முன்னிட்டுக் கொண்டு பித்ரு லோகத்தை அடைகிறான். பின் சந்திரலோகத்தில் அம்ருத மயமான திவ்ய தேகத்தைப் பெற்று பெரும் போக சுகங்களை அனுபவிக் கின்றான்.
"தத்ர சந்த்ர ஸமாநோஸௌ யாவத் கர்ம பலம் வஸேத்||" (16)
"ததைவ கர்மஷேஷேண யதைதம் புரா வ்ரஜேத்|"
பொருள்:
தத்ர - அவ்வுலகில்; அஸௌ - இந்த ஜீவன்; சந்த்ரஸ மாந:- சந்திரனுக்கு நிகராய்; யாவத் கர்ம பலம் எதுவரை கர்ம பலனான புண்ணியம் உள்ளதோ; வஸேத் - வசிப்பான்; ததா ஏவ அப்படியே; கர்ம ஷேஷேண -மீதியுள்ள கர்ம வினையால்; புந: - மீண்டும்; யதேதம் - இங்கிருந்து போன வழியாகவே; ஆவ்ரஜேத் - வருவான்.
கருத்து:
சந்திர உலகில், இந்த ஜீவன் சந்திரனுக்கு நிகராக இருந்து. எதுவரை அங்கிருக்கத்தக்க புண்ணிய பலன் உள்ளதோ அதுவரை அங்கு வசிக்கும். பிறகு மீதியுள்ள கர்ம வினையை அனுபவிக்க, இங்கிருந்து எந்த வழியாகப் போனதோ, அதே வழியாகத் திரும்பி வரும்.
விளக்கம் :
புண்ணிய கருமங்களின் நற்பயனை அனுபவிக்க சந்திர லோகம் கிடைக்கிறது. கர்ம வினையோ 3 வகையாக சேர்த்து வைத்துள்ளது. இந்தப் பிறவியில் அனுபவிக்க அதிலிருந்து எடுத்து வந்துள்ளது, இந்தப் பிறவியில் புதிதாக சேர்க்கின்றது என்று உள்ளது. எனவே மொத்தமாக புண்ணி யத்தையோ, பாபத்தையோ அனுபவிக்க முடியாது. புண்ணிய பலனுக்கேற்ற நல்லுலகமும், பாவத்துக்கேற்ற மற்ற பலனும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
புண்ணிய காரியங்களுக்குரிய புண்ணிய பலனை அனுபவித்த பிறகு, சேர்த்து வைத்துள்ள வினைப் பயனை அனுபவிக்க மீண்டும் பூமிக்கு ஜீவன் வரத்தான் வேண்டும்.
புண்ணியத்தின் மிச்சமோ, பாவத்தின் மிச்சமோ இல்லாமல் போன பிறகுதான், போவதும் வருவதுமான ஜீவனின் இந்த சஞ்சாரம் நின்று முக்தி கிட்டும்.
"வபுர் விஹாய ஜீவத்வம் ஆஸாத்யாஷமே திஸ:||"
"ஆகாஷாத் வாயு மாகத்ய வாயோரம்போ வ்ரஜத்யத| அத்ப்யோ மேகம் ஸமா ஸாத்ய ததோ வ்ருஷ்டிர் பவேதஸெள||" (18)
"ததோ தாந்யாநி யஷ்யாணி ஜாயதே கர்ம சோதித:|"
பொருள்:
ஸ: - அவன்; வபு: - உடலை; விஹாய - விட்டு; ஜீவத்வ- ஜீவத்வத்தை; ஆஸாத்ய அடைந்து; ஆகாஷம் -ஆகா சத்தை: ஏதி - அடைகின்றான்; ஆகாஷாத் - ஆகாசத்திலி ருந்து; வாயும் வாயுவை; ஆகத்ய - அடைந்து; அத-பின்னர்; வாயோ: - வாயுவினின்றும்; அம்ப: - தண்ணீரை: பிரஜதி - அடைகிறான்; அத்ப்ய: - தண்ணீரிலிருந்து; மேகம் - மேகத்தை; ஸமாஸாத்ய - அடைந்து; தத: - பிறகு; அஸௌ. இந்த ஜீவன்; வருஷ்டி - மழை; பவேத் - ஆகின்றான்; தத: பிறகு; கர்ம சோதித கர்ம வினைகளுக்குத் தக்கபடி; தாந்யாநி - தாந்யங்களும்; பக்ஷயாணி - ஜாயதே - ஆகின்றான். உணவுகளும்:
கருத்து:
ஜீவன் அந்த உடலைவிட்டு, வெறும் ஜீவனாக ஆகாசத்தை அடைகின்றது; ஆகாசத்திலிருந்து வாயுவை அடைகின்றது; வாயுவிலிருந்து தண்ணீரை அடைகின்றது; தண்ணீரிலிருந்து மேகத்தை அடைகின்றது; பிறகு இந்த ஜீவன் மழையில் கலந்து வந்து தானியமாகிறது; பிறகு அந்த தானியம் சமைக்கப்பட்ட உணவோடு இருக்கிறது.
*****11.6.2024
"யோநிமந்யே ப்ரபத்யந்தே ஷரீரத்வாய தேஹிந:II" (19)
"முக்திமந் யேது ஸம்யாந்தி யதா கர்ம யதா ஷ்ருதம்| ததோந்நத்வம் ஸமாஸாத்ய பித்ருப்யாம் புஜ்யதே பரம்||" (20)
"ததஷ்ஷுக்லம் ரஜஷ்சைவ பூத்வா கர்போ பிஜாயதே| தத: கர்மாநுஸாரேண பவேத் ஸ்த்ரீ புந்ந பும்ஸக:||" (21)
பொருள்:
தேஹிந: - ஜீவனுக்கு; ஷரீரத்வாய - உடல் எடுப்பதற்காக; அந்யே - சிலர்; யோநிம் - யோனியை; ப்ரபத்யந்தே - அடைகின்றனர்; அந்யேது - மற்ற சிலர்; யதா கர்ம யதாஷ்ருதம் -கர்ம வினைக்கும், கேட்டதற்குத்தக்கபடி; முக்திம் - முக்தியை; ஸம்யாந்தி - அடைகின்றனர்; தத: - இங்கு; அந்நத்வம் - உண்ணப்படும் உணவாதலை; ஸமாஸாத்ய அடைந்து; பித்ருப்யாம் பெற்றோரால்; புஜ்யதே உண்ணப்படுகின்றான்; பரம் - அதன்பிறகு; ஷுகரம் - சுக்லமோ; ரஜஸ்ச - ரஜஸோ; பூத்வா - ஆகி; கர்ப: - கர்ப்பம்; அபிஜாயதே - உண்டாகின்றது; தத: அதன்பிறகு; கர்மா நுஸாரேண - கர்மவினைக்குத் தக்கபடி; ஸ்த்ரீபுந்நபும்ஸக: - ஆணாகவோ, பெண்ணாகவோ, அலியாகவோ பிறக்கிறது.
கருத்து:
உடல் எடுப்பதற்காக சில ஜீவன்கள் யோனியை அடைகின்றன. வேதம், புராணம், கீதை முதலியவற்றை கேட்ட புண்ணிய பலனாலும், கர்ம பலனாலும் சில ஜீவன்கள் முக்தியை அடைகின்றன.
இவ்வுலகில் உடலெடுக்கும் ஜீவன் ஒருவர் உண்ணும் உணவாகி, உள்ளே போகிறது. பிறகு சுக்லமாகவோ, ரஜஸாகவோ மாறுகிறது. அதன் பிறகு கர்ப்பத்தை அடை கிறது. அதன்பிறகு கர்மவினைக்குத் தக்கபடி ஆணாகவோ, பெண்ணாகவோ, அலியாகவோ பிறவியெடுக்கிறது.
"ஏவம் ஜீவகதி: ப்ரோக்தா முக்திம் தஸ்ய வதாமி தே| யஸ்து ஷாந்த்யாதி யுக்தஸ்ஸந் ஸதாவித்யாரதோ பவேத்|| (22)
"ஸயாதி தேவயாநேந ப்ரஹ்மலோகா வதிம்நர:| அர்சிர் பூத்வா திநம் ப்ராப்ய ஷுக்ல பக்ஷம தோவ்ரஜேத்|| " (23)
"உத்தராயண மாஸாத்ய ஸம்வத்ஸரமதோ வ்ரஜேத்| ஆதித்ய சந்த்ர லோகெளது வித்யுல்லோக மத: பரம்||" (24)
"அத திவ்ய: புமாந் கஸ்சித் ப்ரஹ்மலோகா திஹைதிஸ்:| திவ்யே வபுஷி ஸந்தாய ஜீவமேவம் நயத்யஸௌ|| (25)
பொருள்:
ஏவம் - இவ்வாறு; ஜீவகதி: - ஜீவன்களின் போக்கானது; ப்ரோக்தா -சொல்லப்பட்டது; தஸ்ய அதன்; முக்திம் முக்தி வழியும்; தே - உமக்கு; வதாமி - சொல்கின்றேன்; யஸ்து - எவன்; ஸாந்த்யாதியுக் தஸ்ஸந் - சாந்தி முலியவை களோடு கூடி; ஸதா எப்போதும் ; வித்யாரத; பவேத் பிரம்ம வித்தையில் ஆர்வத்தோடு இருப்பவன்; ஸ: நர: - அந்த மனிதன்; தேவயாநேந - தேவயானம் என்னும் தேவ மார்க்கத்தில்; ப்ரஹ்மலோகா வதிம் - பிரம்ம லோகம் வரை; யாதி -செல்கின்றான்; அர்சிர் பூத்வா - அர்ச்சனா வடிவமாக; தினம் - தின தேவதையை; ப்ராப்ய அடைந்து; அத: பிறகு: ஷுக்லபக்ஷம் - சுக்லபட்ச தேவதையை; வ்ரஜேத் - அடைகின்றான்; உத்தராயணம் - உத்தராயண தேவதையை; ஆஸாத்ய - அடைந்து; அத: - பிறகு; ஸம்வத்ஸரம்- வருஷ தேவதையை; வ்ரஜேத் - அடைகின்றான்; ஆதித்ய சந்த்ர லோகௌது - ஆதித்ய சந்திர உலகங்களையும்; அத பிறகு; வித்யுல்லோகம் - வித்யுத் லோகத்தையும் அடை கின்றான்; அத - பிறகு; திவ்ய: புமாந் - திவ்ய புருஷன்; கச்சித் - ஒருவன்; ப்ரஹ்மலோகாத் - பிரம்மலோகத்திலிருந் தும்; இஹ - இங்கு; ஏதி -வருகின்றான்; ஸ: அவன்; ஏநம்- இந்த; ஜீவம் - ஜீவனை; திவ்யே - திவ்யமான; வபுஷி - உடலில்; ஸந்தாய - பிரவேசிக்கச் செய்து; நயதி - கொண்டு போகின்றான்.
கருத்து:
இவ்வாறு ஜீவன் போகும் கதியைக் கூறினேன். ஜீவன்களின் முக்தி வழியை இப்போது கூறுகிறேன்.
சாந்தி முதலியவைகளோடு கூடி எப்போதும் பிரம்ம வித்தையில் ஆர்வத்தோடு இருக்கும் மனிதனின் ஜீவன் தேவயானம் என்னும் தேவ வழியாக பிரம்ம லோகம் வரையில் செல்கிற்து.
அந்த ஜீவன் அர்ச்சித்த வடிவம் ஏற்று தினதேவதையை அடைந்து, பிறகு சுக்ல பட்ச தேவதையை அடைந்து, பிறகு உத்தராயண தேவதையை அடைந்து, பிறகு வருஷ தேவதையை அடைகின்றது.
பின் சூரிய சந்திர உலகங்களைக் கடந்து வித்யுத் லோகத்தை அடைகின்றது.
அங்கே, பிரம்ம லோகத்து திவ்ய புருஷன் ஒருவன் வந்து இந்த ஜீவனை திவ்யமான ஒரு சரீர்த்தில் புகச் செய்து அழைத்துக் கொண்டு போகிறான்.
*****21.6.2024
"ப்ரஹ்மலோகே திவ்ய தேஹே புக்த்வா போகாந் ய தேப்ஸிதாந்| தத்ரோஷித்வா சிரம் காலம் பருஹ்மணா ஸஹமுச்யத||" (26)
பொருள்:
ப்ரஹ்மலோகே - பிரம்ம லோகத்தில்; திவ்யதேஹே திவ்ய சரீரத் தோடு; யதேப்ஸிதாந் - விரும்பிய; போகாந் -
போகங்களை; புக்த்வ - அனுபவித்து; தத்ர - அங்கு; சிரம் காலம் வெகு காலம்; உஷித்வா வாசம் செய்து; ப்ரஹ் மணாஸஹ பிரம்மாவோடுகூட; முச்யதே - முக்தியடை கின்றான்.
கருத்து:
பிரம்ம லோகத்தில் திவ்ய சரீரத்தோடு, விரும்பிய போகங்களை அனுபவித்தபடி வெகு காலம் வாசம் செய்து, பிறகு பிரம்மாவோடுகூட முக்தியடைகின்றான்.
"ஷுத்தப்ரஹ்மரதோ யஸ்து நஸயாத்யேவ குத்ரசித்| தஸ்ய ப்ராணாவிலியந்தே ஜலே ஸைந் தவ கில்யவத்||" (27)
பொருள்:
யஸ்து - யாதொருவன்; ஸுத்தப்ரஹ்மரத: - சுத்த பிரம்மத்தில் விருப்புற்றவனோ; ஸ: - அவன், குத்ரசித் - ஓரிடத்திற்கும்; நயாதி ஏவ - போகின்றதேயில்லை; தஸ்ய - அவனுடைய; ப்ராணா: - பிராணன்கள்; ஜலே - தண்ணீரில்; ஸைந்தவ கில்யவத் - உப்புக்கல் போல; விலீய நதே - கலந்து விடுகின்றன.
கருத்து:
சுத்தமான பிரம்மத்தில் விருப்பம் கொண்டவன் ஓரிடத்திற்கும் போகின்றதில்லை. அவனுடைய பிராணன்கள் தண்ணீரில் உப்புக்கல் போல, பிரம்மத்தோடு கலந்து விடுகின்றன.
விளக்கம் :
பிரம்மா வேறு. பிரம்மம் வேறு. பிரம்மா என்பவர் பிரம்ம தேவர். இவரை பிரம்மன் என்றும் சொல்லுவார்கள். பிரம்மம் என்பது ஜோதி சொரூபமானது; தன்னிலும் வேறாக யாருமற்றது. சுத்தமான பிரம்மத்தை அடைய விரும்பியவன், அடையும் நிலையைப் பெற்றவன் தேவ லோகங்களுக்கோ, பிரம்ம லோகத்துக்கோ செல்வதில்லை. அந்தந்த லோகத்து திவ்ய தேகங்களைப் பெறுவதில்லை. தண்ணீரில் போட்ட உப்புக்கல் தண்ணீரில் கரைந்து ஒன்றாகிவிடும். அதைப்போல இந்த ஜீவன் பிரம்மத்தோடு கலந்து ஐக்கியமாகிவிடும்.
"ஸ்வப்ந த்ருஷ்டாய தா ஸ்ருஷ்டி: ப்ரபுத்தஸ்ய விலீயதே| ப்ரஹ்மஞான வதஸ்தத்வத் விலீயந்தே ததைவதே||" (28)
பொருள்:
ஸ்வப்நத்ருஷ்டா - கனவில் கண்ட; ஸ்ருஷ்டி:- தோற்றம்; ப்ரபுத்தஸ்ய - விழித்துக் கொண்டவனுக்கு; யதா எப்படி; விலியதே காணப்படாமல் லயமடைகிறதோ; தத்வத் - அதுபோல; ப்ரஹ்மஞானவத் - பிரம்ம ஞானிக்கு; ததைவ அவ்வாறே; தே - அவைகள்; விலியந்தே - லயமடைகின்றன.
கருத்து:
கனவில் கண்ட காட்சிகள், விழித்துக் கொண்டவனுக்கு காணப்படாமல் லயமடைந்து விடுவதுபோல பிரம்ம ஞானிக்கும், மாயையான உலகத் தோற்றங்கள் முழுவதும் லயமடைந்து விடுகின்றன.
"வித்யா கர்ம விஹீ நோ யஸ் த்ருதீயம் ஸ்தாநமேதிஸ:| புக்த் வா ச நரகாந் கோராந் மஹா ரௌரவரௌரவாந்||" (29)
பொருள்:
ய - எவன்; வித்யாகர்மவிஹீந - பிரம்ம வித்யை, சத் கர்மங்கள், இவை எவையும் இல்லாதவனோ; ஸ: அவன்; த்ருதீயம் - மூன்றாவது; ஸ்தாநம் - இடத்தை; ஏதி - அடைகின்றான்; கோராந் - பயங்கரமானவைகளான; மஹா ரௌரவ ரௌரவாந் நரகாந் மகா ரௌரவங்களாகிய நரகங்களை: புக்த்வா ச - அனுபவிக்கிறான்.
கருத்து:
பிரம்ம வித்யை அறியாமல், புண்ணிய கர்மங்களைச் செய்யாதவன் மூன்றாவதான இடத்தை அடைகின்றான். அது பயங்கரமான ரௌரவம் முதலான பல நரகங்களின் இருப்பிடம். அங்கே நரக வேதனைகளை அனுபவிக்கிறான்.
"பஷ்சாத் ப்ராக்த நஷேஷேண க்ஷுத்ர ஜந்துர் பவேத ஸெள| யூகாமஷ கதம்ஷாதி ஜந்மாஸௌ லபதே புவி||" (30)
"ஏவம் ஜீவகதி: ப்ரோக்தா கிமந்யச் சரோது மிச்சஸி|"
பொருள்:
அஸௌ - இந்த ஜீவன்; புவி - பூவுலகில்; யூகாமசக தம்ஷாதி ஜந்ம - ஈ, கொசு முதலான பிறவியை; லபேத - அடைகின்றான்; ஏவம் - இவ்வாறு; ஜீவ கதி: - ஜீவனின் கதியானது; ப்ரோக்தா - சொல்லப்பட்டது; அந்யத் - வேறு; கிம் எதனை; ஷ்ரோதும் - கேட்பதற்கு; இச்சஸி - விரும்புகின்றீர்?
கருத்து:
நரக வேதனைகளை அனுபவித்த பிறகு அந்த ஜீவன். பூவுலகில் ஈ, கொசு முதலான பிறவியை அடைகின்றான். இவ்வாறு ஜீவனின் கதியானது என்னால் சொல்லப்பட்டது. வேறு எதனைக் கேட்பதற்கு விரும்புகின்றீர்?
ஸ்ரீ ராமர் உவாச:
"பகவந் யத் த்வயா ப்ரோக்தம் பலமது ஞாநகர்மணோ:||" (31)
"ப்ரஹ்ம லோகே சந்த்ர லோகே புங்க்தே போகாநிதி ப்ரபோ| கந்தர்வாதிஷு லோகேஷு கதம் போக: ஸ்மீரித:II" (32)
"தேவத்வம் ப்ராப்நுயாத் கஷ்சித் கஷ்சிதிந்ரத்வ மேவவா| ஏதத் கர்ம பலம்வாஸ்து வித்யா பலமதா பி வா||" (33)
"தத் ப்ரூஹி கிரிஜாகாந்த தத்ரமே ஸம்ஷயோ மஹாந்|
பொருள்:
பகவந் - பகவானே; த்வயா - உம்மால்; ப்ரஹ்மலோகே- பிரம்ம லோகத்தில்; சந்த்ர லோகே சந்திர லோகத்தில்; போகாந் போகங்களை; புங்க்தே - அனுபவிக்கின்றான்; இதி - என்று; ஞாநகர்மணோ: - ஞானம், கர்மம் இவைகளுக்கு; யத் - யாதொரு; பலம் பலன்; ப்ரோக்தம் -சொல்லப் பட்டதோ, கந்தர்வாதிஷு லோஷுே - கந்தர்வலோகம் முதலான லோகங்களில்; கதம் - எப்படி; போக: - போகம்; ஸமீரித:- சொல்லப்பட்டது; கஷ்சித் - ஒருவன்; தேவத்வம் - தேவனாகும் தன்மையை; ப்ராப்நுயாத் - அடைய வேண்டும்; கஷ்சித் ஒருவன்; இந்த்ரத்வம் ஏவ இந்திரனாகும் தன்மையை அடைய வேண்டும்; ஏதத் - என்னும் இது; கர்ம பலம்வா கர்மவினைப் பலனாகவோ; வித்யாபலமபி ஞானத்தின் பலனாகவோ; அஸ்து - இருக்கட்டும்; கிரிஜா காந்த - பார்வதீநாதரே; தத் - அதனை; ப்ரூஹி சொல் வீராக; தத்ர - அவ்விஷயத்தில்; மே - எனக்கு; மஹாந் - பெரிய; ஸம்ஷய: - சந்தேகம் உள்ளது.
கருத்து:
பகவானே ஒருவன் ஞானம், கர்மம் இவைகளின் பலனுக்குத்தக்கபடி பிரம்ம லோகத்திலும், சந்திர லோகத் திலும் போகங்களை அனுபவிக்கிறான் என்று கூறினீர்கள். கந்தர்வலோகம் முதலான லோகங்களின் போகம் எப்படிப் பட்டது? ஒருவன் இந்திரத் தன்மையை பெறுவதோ, தேவத் தன்மையைப் பெறுவதோ, கர்மவினைப் பலனாகவோ, ஞானத்தின் பலனாகவோ இருக்கட்டும். இந்த உலகங்களின் போகங்களின் ஏற்றத் தாழ்வுகள் எப்படியானது? அதனைச் சொல்வீராக! இது விஷயத்தில் எனக்கு பெரிய சந்தேகம் உள்ளது.
*****27.6.2024
சிவ உவாச:
"தத் வித்யா கர்மணோ ரேவாநுஸாரேண பலம் பவேத்||" (34)
"யுவா ச ஸுந்தர: ஷுரோ நீரோகோ பலவாந் பவேத்| ஸப்த த்வீபாம் வஸுமதீம் புங்க்தே நிஷ்கண்ட காம் யதி||" (35)
"ஸ ப்ரோக்தோ மாநுஷாநந்தஸ் தஸ்மாச்சதகுணஸ்ம்ருத:| மநுஷ்யஸ்தபஸாயுக்தோ கந்தர்வோ ஜாயதேஸ்யது||" (36)
பொருள்:
தத் - கந்தர்வ போகம் முதலானது; வித்யாகர்மணோ: ஏவ் அநுஸாரேண - பிரம்ம வித்தை,கர்மவினையை அனு சரித்தே; பலம் பவேத் - பலன் ஏற்படும்; யுவாச - வாலிபனும்; ஸுந்தர:- அழகனும்; ஷுர: - சூரனும்; நீரோக: - நோயற்ற வனும்; பலவாந் - பலவானும்; ஸப்த த்வீபாம் - ஏழு த்வீபங் களைக் கொண்ட; வஸுமதீம் - பூமியை; நிஷ் கண்டகாம் குறைவின்றி முழுவதுமாக ; புங்கதேயதி - ஆள்கின்றான் என்றால்; ஸ: அந்த போகமானது; மாநுஷாநந்த:- மனித ஆனந்தம் (என்று); ப்ரோக்த:- சொல்லப்பட்டுள்ளது; மநுஷ்ய:- மனிதன்; தபஸாயுக்த: - தவம் உடையவனாக; கந்தர்வ - கந்தர்வனாக; ஜாயதே - ஆகின்றான் (என்றால்); அஸ்யது அவனுக்கு; தஸ்மாத் - அதனைவிட (மனித ஆனந்தத்தைவிட ); ஷதகுண: - நூறு பங்கு என்று; ஸ்ம்ருத:- சொல்லப்பட்டது.
கருத்து:
பிரம்மவித்யா ஞானம், கர்மவினை இவைகளுக்கேற்பவே கந்தர்வ, தேவ போகங்கள் ஏற்படும்.
ஒருவன் வாலிபனும், அழகனும், சூரனும், நோயற்றவனும், பலவானுமாக இருந்து, இந்த உலகம் முழுவதையும் குறைவின்றி ஒரு குடைக்கீழ் ஆள்கின்றான் என்றால் அந்த போகமானது மனித ஆனந்தம் என்று சொல்லப்பட்டுள்ளது.
தவமுடைய மனிதன் கந்தர்வனாகிறான் என்றால், அந்த கந்தவர்வனுக்கு ஏற்படும் ஆனந்தம், மனித ஆனந்தத்தை விட நூறு பங்கு அதிகம் என்று சொல்லப்பட்டுள்ளது.
"தஸ்மாச்சத குணோ தேவ கந்தர்வாணாம் ந ஸம்ஷய:| ஏவம் ஷதகுணாநந்த உத்தரோத்தரதோ பவேத்||" (37)
"பித்ருணாம் சிர லோகாநாம் ஆஜாந ஸுரஸம்பதாம்| தேவதா நாமதேந்த்ரஸ்ய குரோஸ் தத்வத் ப்ரஜாபதே:||" (38)
"ப்ரஹ்மணஷ்சைவமாநந்தா: புரஸ்தாதுத்தரோத் தரம்|"
பொருள்:
தஸ்மாத் - அதனிலும்; தேவகந்தர் வாணாம் - தேவ கந்தர்வர்களுடைய ஆனந்தம்; ஸதகுண: - நூறுமடங்கு அதிகம்; ஸம்ஷய: ந - சந்தேகமில்லை; ஏவம் - இவ்வாறு; உத்தரோத்தரத:- ஒன்றுக்கு மேல் ஒன்று; ஷதகுணாநந்த - நூறு பங்கு அதிக ஆனந்தம்; பவேத் - ஆகும்; சிரலோகாநாம் - நீடித்திருக்கும் உலகங்களையுடைய; பித்ருணாம் - பித்ருக்களுக்கும்; ஆஜாநஸுரஸம்பதாம் - முதலிலிருந்தே தேவ சுகத்தை பெற்றுள்ள; தேவ தாநாம் - தேவர்களுக்கும்; அத - பிறகு; இந்த்ரஸ்ய -இந்திரனுக்கும்; குரோ:- தேவ குருவுக்கும்; தத்வத் - அவ்வாறே; ப்ரஜாபதே: - பிரஜாபதி; ப்ரஹ்மண: ச பிரம்மாவுக்கும்; புரஸ்தாத் - முன்னதற்கு; உத்தரோத்தரம் - மேன்மேலும்; ஆநந்தா: - ஆனந்தங்கள் நூறு பங்கு அதிகம்.
கருத்து:
கந்தர்வர்களுடைய ஆனந்தத்தைவிட, தேவ கந்தர்வர்களுடைய ஆனந்தம் நூறு மடங்கு அதிகம். நீடித்திருக்கும் உலகங்களைப் பெற்றுள்ள தேவர்களுக்கு அதைவிட நூறு மடங்கு ஆனந்தம் அதிகம்.
முதலிலிருந்தே தேவர்களாகத் தோன்றியுள்ள தேவர்களுக்கு அதைவிட நூறு மடங்கு ஆனந்தம் அதிகம். இந்திரனுக்கு அதைவிட நூறு பங்கு ஆனந்தம் அதிகம்.
தேவ குருவான ப்ருஹஸ்பதிக்கு, அதைவிட நூறு மடங்கு ஆனந்தம் அதிகம்.
பிரம்ம தேவருக்கு அதைவிட நூறு மடங்கு ஆனந்தம் அதிகம்.
"ஞாநாதிக்யாத் ஸுகாதிக்யம் நாந்யதஸ்தி ஸுராலயோ| (39)
"ஷ்ரோத்ரியோ அவ்ரஜிநோகாம ஹதோ யஸ்து த்விஜோ பவேத்| தஸ்யாப்யேவம் ஸமாக்யாதா ஆநந்தாஷ் சோத்த ரோத்தரம்|| (40)
பொருள்:
ஞாநாக்யத் - ஞானச் சிறப்பினால்; ஸுகாதிக்யம் - சுகம் சிறக்கும்; ஸுராலயே - தேவலோகத்தில்; அந்யத் வேறு; நாஸ்தி - இல்லை; ஷ்ரோத்ரிய: - வேத மோதி அதன் பொருள் உணர்ந்தவனும்; அவ்ர ஜிந: - பாவம் புரியாத வனும்; அகாமஹத: - காம மற்றவனும் ஆகிய; ய: யாதொரு; த்விஜோத்தம - அந்தணனனோ; தஸ்ய அபி - அவனுக்கும்; ஏவம் இவ்வாறு; உத்தரோத்தரம் - மேன்மேலும்; ஸமாக் யாதா: சொல்லப்பட்ட; ஆனந்தா: - ஆனந்தங்கள் உள்ளன.
கருத்து:
ஞானத்தினால்தான் சுகம் கிடைக்கும். தேவலோகத்தில் சுகத்தைத் தவிர்த்து வேறு இல்லை. பாவம் புரியாதவனாக, காமமற்று, வேத மோதி, அதன் பொருளுணர்ந்த அந்தணனுக்கும் மேன்மேலும் முன்னர் சொல்லப்பட்ட ஆனந்தங்கள் உள்ளன.
பின் குறிப்பு: 36-39 ஸ்லோகங்கள், தைத்திரீய உபநிஷத் ஆனந்தவல்லீயில் வரும் ஸ்லோகங்களுக்கு ஒப்பாகும்.
*****9.7.2024
"ஆத்மஞாநாத் பரம் நாஸ்தி தஸ்மாத் தஷரதாத்மஜ| ப்ராஹ்மண: கர்ம பிர்நைவ வர்ததேநைவ ஹீயதோ|| (41)
"நலப்ய: பாதகேநைவ கர்மணா ஞாந வாந்யதி| தஸ்மாத் ஸர்வாதிகோ விப்ரோ ஞாநாநேவ ஜாயதே||" (42)
பொருள்:
தஷரதாதமஜ - தசரதன் தனயனே; தஸ்மாத் - ஆதலால்; ஆத்ம ஞாநாத் -ஆத்ம ஞானத்தைவிட;பரம் -சிறந்தது; நாஸ்தி -இல்லை; ப்ராஹ்மண: - ஆத்மஞானியான அந்த ணன்; கர்மபி:- செய்யும் செயல்களால்; ந வர்ததே ஏவ - மேன்மை பெறுவதில்லை; நஹீயதே ஏவ குறைவடைவது மில்லை; ஞாநவாந்யதி - ஞானியாக இருந்தால்; பாதகேந் கர்மணா பாதகச் செயலால்; நலப்யதே -பற்றப்பட மாட்டான்; தஸ்மாத் - ஆதலால்; ஞாநவாந் - ஞானியான; விப்ர ஏவ அந்தணனே; ஸர்வாதிக:- அனைவரிலும் உத்த மனாக; ஜாயதே - ஆகின்றான்.
கருத்து:
தசரதன் தனயனே, ஆத்ம ஞானத்தைவிடச் சிறந்தது வேறெதுவும் இல்லை. ஆத்ம ஞானியான அந்தணன், தான் செய்யும் செயல்களால் உயர்வோ, தாழ்வோ அடைவதில்லை. ஞானியை பாவச் செயல்கள் பற்றா, எனவே ஞானியான அந்தணனே அனைவரிலும் உத்தமன்.
"ஞாத்வாய: குருதே கர்ம தஸ்ய அக்ஷய பலம் பவேத்| யத் பலம் லபகே மர்த்ய: கோடி ப்ராஹ்மண போஜனை:||" (43)
"தத்பலம் ஸமவாப்நோதி ஞாநிநம் யஸ்து போஜயேத்|
பொருள்:
ய: - எவன்; ஞாத்வா - அறிந்து; கர்ம - கர்மாவை; குருதே - செய்கின்றானோ; தஸ்ய - அவனுக்கு; அக்ஷயபலம் - குறைவற்ற பலன்; பவேத் - நிகழும்; மர்த்ய: - மனிதன்; கோடி ப்ராஹ்மண போஜநை: - கோடி அந்தணர்களுக்கு அன்னமளிப்பதால்: யத்பலம் எந்தப் பலனை; லபதே - பெறுகின்றானோ; ய - யாதொருவன்; ஞாநிநம் - ஞானிக்கு; போஜயேத் - அன்னமளிக்கின்றானோ (அவன்); தத் பலம் - அந்தப் பலனை; ஸம வாப் நோதி - அடைகின்றான்.
கருத்து:
செய்யும் செயலின் பலன் இன்னது எனத் தெரிந்து செய்பவனுக்கு குறைவற்ற பலன் கிடைக்கும். கோடி அந்தணர்களுக்கு அன்னதானம் அளிப்பதால் என்ன புண்ணிய பலன் கிட்டுமோ, அதே அளவு பலன், ஞானிக்கு அன்னமளிப்பதால் கிட்டும்.
"ஞாநவந்தம் த்விஜம் யஸ்து த்விஷ்ய தே ச நராதமா||" (44)
ஸஷுஷ்யமாணோ ம்ரியதே யஸ்மாதீஷ்வர ஏவஸ:|
பொருள்:
யஸ்து நராதம:- எந்த அதம மனிதன்; ஞாநவந்தம் ஞானவானான; த்விஜம் - அந்தணனை; த்விஷ்யதே துவேஷிக்கின்றானோ: ஸ: - அவன்; ஷுஷ்யமாண: துன்பத்தால் தகிக்கப்பட்டு; மரியதே - மடிகின்றான்; யஸ்மாத் எதனால்; ஸ: - அந்த ஞானி; ஈஷ்வர ஏவ ஈஸ்வரனே.
கருத்து:
ஞானி என்பவன் ஈஸ்வரனேயாவன். ஞானியான அந்தணனை துவேஷிக்கின்ற இழிவான மனிதன், துன்பத் தால் தகிக்கப்பட்டு மடிவான்.
"உபாஸகோ ந யாத்யேவ யஸ்மாத் புநதோகதிம்||" (45)
"உபாஸந ரதோ பூத்வா தஸ்மா தஸ்மா தாஸ்வ ஸுகீந்ருப||
பொருள் :
யஸ்மாத் யாதொரு காரணத்தால்; உபாஸக - உபாசனை செய்பவன்; புந: - மீண்டும்; அதோகதிம் - இழிநிலையை; ந யாதி ஏவ - அடைகின்றதில்லையோ; தஸ்மாத் - ஆதலால்; ந்ருப - அரசே; உபாஸநரத: - உபாசனையில் விருப்புற்றவனாகவிருந்து; ஸுகீ - சுகவானாக; ஆஸ்வ - இருப்பாயாக;
கருத்து:
உபாசனை செய்பவன், மீண்டும் இழிநிலையை அடையவே மாட்டான். ஆதலால் அரசே, உபாசனையை விருப்பத்தோடு செய்பவனாயிருந்து சுகவானாக வாழ்வாயாக.
இதி பத்ம புராணே..சிவ கீதா உபநிஷத்..பிரம்ம வித்யாயாம்..யோக சாஸ்திரே..சிவ ராகவ சம்வாதே..உபாசனா யோக நிரூபண..ஏகாதசயோத்யாய சம்பூர்ண:
திருச்சிற்றம்பலம் 🙏
-பதினோராவது அத்தியாயம் முற்றிற்று
Comments
Post a Comment