சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 1 - 10 விளக்கத்துடன்
ஸ்லோகம் - 1 - பரமசிவன் பராசக்தி நமஸ்காரம் "கலாப்யாம் சூடலாங்க்ருத ஸசிகலாப்யாம் நிஜதப: பலாப்யாம்| பக்தேஷு ப்ரகடித பலாப்யாம் பவதுமே| சிவாப்யாம் அஸ்தோக த்ரிபுவன சிவாப்யாம் ஹ்ருதிபுன:பவாப்யாம்| ஆனந்த ஸ்புரத் அனுபவாப்யாம் நதிரியம்||" " பரமசிவனுக்கும் பராசக்திக்கும் நமஸ்காரம் " "சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும் ந சேதேவம் தேவோ ந கலு: குசல: ஸ்பந்திது மபி: அதஸ்த்வா மாராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபிரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய ப்ரபவதி" - சௌந்தர்யலஹரி அந்த ஸ்லோகத்தில், " கலு " என்ற வார்த்தை வரும், இதற்கு அர்த்தம், இது நிச்சயம், சந்தேகம் வேண்டாம் என்பதாகும். கலாப்யாம் - கலை வடிவாகியவர்களும், சூடாலங்க்ருத சசிகலாப்யாம் - சந்திரக் கலையைத் தலையில் அணிந்தவர்களும், ஒருவருக்கொருவர் தவத்தின் பயன் வடிவாகியவர்களும் பக்தேஷு - அடியார்களிடத்தில் (பேதம் கூடாது சிவ சக்தி சேர்ந்து பூஜை செய்வது பூரண பலன்). ப்ரகடித பலாப்யாம் - அருள் பயனை விளங்கச் செய்பவர்களும் அஸ்தோக தரிபுவன சிவாப்யாம் - மூவுலகிற்கும் குறைவற்ற மங்களங்களை அருள்பவர்களும் ஹ்ருதி...