சிவ கீதை அத்தியாயம் 12

அத்தியாயம் - 12

உபாசனாவிதி - இராமர் வினவும் கேள்விகளுக்கு சிவபெருமான்
பதிலுரைக்கின்றார். சம்பத்து, சஞ்சரகம், அத்யாசம், அரோபம் என்ற நான்கு விதமான உபாசனைகளும் விளக்கப்படுகின்றது. இந்திரிய கட்டுப்பாடு களைப்பற்றியும். பரமசிவனின் ரூபங்களைப்பற்றியும், சதாசிவரின் இயல்புகளைப்பற்றியும் இவ்வத்தியாயத்தில் விளக்கப்படு கின்றது.

ஸ்ரீ ராம உவாச:
"பகவந் தேவதேவேஷ நமஸ்தேஸ்து மஹேஷ்வரர்| உபாஸநா விதிம் ப்ரூஹி தேஷம் காலம்து தஸ்யசு||"

பொருள்:
தேவதேவேஷ - தேவாதி தேவரே; பகவந் - பகவானே; தே - உமக்கு; நம: - நமஸ்காரம்; அஸ்து - இருக்கட்டும்; மஹேஷ்வர - மகேஸ்வரரே; உபாஸநா விதிம் உபாசனை முறையை; தஸ்ய து - அதன்;தேஷம் - இடத்தையும்; காலம் ச - காலத்தையும்; ப்ரூஹி -கூறுங்கள்.

கருத்து:
ராமர், "தேவாதி தேவரே, பகவானே, மகேஸ்வரரே உம்மை வணங்குகின்றேன். உபாசனை செய்ய வேண்டிய முறையையும், அதற்குத் தக்க இடம், காலம் முதலியவற்றையும் கூறுங்கள்.

சிவ உவாச:-
"ஷ்ருணு ராம் ப்ரவக்ஷ்யாமி தேஷகாலமுபாஸநம்| மதம்ஷே ந பரிச்சிந்நா தேஹாஸ்ஸர்வ திவௌகஸாம்||"

பொருள்:
ராம ராமா; உபாஸநம் - உபாசனையையும்; தேஷ காலம்-இடம்,காலங்களையும்; ப்ரவக்ஷ்யாமி -சொல்லு கின்றேன்; ஷ்ருணு - கேட்பீராக; ஸர்வ தி வெளகஸாம் சகல தேவர்களின்; தேஹா: - தேகங்கள்; மதம் ஷேந - எனது அம்சத்தினால்; பரிச்சிந்நா - பிரிக்கப்பட்டனவாய் உள்ளன.

கருத்து:
ராமா! உபாசனையையும், அதற்குத் தக்க இடம் காலங்களையும் சொல்லுகின்றேன், கேட்பீராக! சகல தேவர்களின் தேகங்களும் எனது அம்சத்தினால் பிரிக்கப்பட்டனவாயுள்ளன. 

"யேத்வந்ய தேவதாபக்தா யஜந்தே ஷ்ரத்தயாந்விதா:| தேபி மாமேவ ராஜேந்த்ர யஜந்த்ய விதிபூர்வகம்||" (3)

பொருள் :
யேது - எவர்கள்; அந்ய தேவதா பக்தா: - வேறு தேவ தைகளிடம் பக்தி கொண்டவர்களாக; ஷ்ரத்தயாந்விதா: சிரத்தையுடன்; யஜந்தே - பூஜிக்கின்றார்களோ; ராஜேந்த்ந்ர - அரசர்களில் சிறந்தவனே; தே அபி - அவர்களும்; அவிதி பூர்வகம் - விதிப்படியின்றி; மாமேவ - என்னையே; யஜந்தி பூஜிக்கின்றனர்.

கருத்து:
அரசர்களில் சிறந்தவரே, எவர்கள் வேறு தேவதைகளிடம் பக்தி கொண்டு சிரத்தையுடன் பூஜிக்கின்றார்களோ, அவர்களும் விதிப்படியின்றி என்னையே பூஜிக்கின்றவராவர்.

"யஸ்மாத் ஸர்வமிதம் விஷ்வம் மத்தோ ந வ்யதிரிச்யதே| ஸர்வ க்ரியாணாம் போக்தாஹம் ஸர்வஸ்யாஹம் பலப்ரத:||" (4)

பொருள்:
யஸ்மாத் - யாதொரு காரணத்தினால்; இதம் - இந்த; ஸர்வம் - முழு ; விஷ்வம் - உலகமும்; மத்த:- என்னிலும்; நவ்யதிரிச்யதே.- வேறுபடுவதில்லையே; ஸர்வ க்ரியாணாம் - சகல கிரியைகளையும்; போக்தா - அனுபவிப்பவன்; அஹம் - நான்; ஸர்வஸ்ய எல்லோருக்கும்; பலப்ரத: அளிப்பவனும்; அஹம் - நான். பலனை

கருத்து:
இந்த உலகம் முழுவதும் என்னிலும் வேறுபடுவதில்லை. எனவே அனைத்து செயல்களையும் செய்பவனும் நானே; அனைவருக்கும் கர்மவினைப் பயனை அளிப்பவனும் நானே.

"யேநாகாரேண யேமர்த்யா மாமேவைகமுபாஸதே| தேநாகாரேண தேப்யோஹம் ப்ரஸந்நோ வாஞ்சிதம் ததே||" (5)

பொருள்:
யே - எந்த; மர்த்யா - மனிதர்; யேந - எந்த; ஆகாரேண - வடிவத்தோடு; மாம்,ஏகம்,ஏவ - ஒருவனே ஆன என்னை; உபாஸதே - உபாசிக்கின்றனரோ; தேப்ய: - அம்மனிதருக்கு; தேந ஆகாரேண - அவ்வடிவம் கொண்டவனாய்; அஹம் - நான்; ப்ரஸந்ந : -மகிழ்ச்சியோடு; வாஞ்சிதம் - விரும்பி யதை;ததே - கொடுக்கின்றேன்.

கருத்து:
எந்த மனிதர் எந்த வடிவத்தோடு, ஒருவனேயான என்னை உபாசிக்கின்றனரோ, அம்மனிதருக்கு அவ்வடிவம் கொண்டவனாய நான் மகிழ்ச்சியோடு விரும்பியதைக் கொடுக்கின்றேன்.

"விதிநா விதிநா வாபி பக்த்யா யே மாமுபாஸதே| தேப்ய:பலம் ப்ரயச்சாமி ப்ரஸந்நோஹம் ந ஸம்ஸய:||" (6)

பொருள்:
விதிநா - விதிப்படியே; அவிதிநா வாபி விதிப்படி யின்றியோ;யே - எவர்; பக்த்யா - பக்தியோடு; மாம் - என்னை; உபாஸதே - உபாசிக்கின்றனரோ; தேப்ய:- அவர்களுக்கு: அஹம் - நான்; ப்ரஸந்ந: - மகிழ்ச்சியோடு; பலம் - பலனை; ப்ரயச்சாமி - கொடுக்கின்றேன்; ந ஸம்ஸய: - சந்தேகமில்லை.

கருத்து:
விதிப்படியோ, விதிப்படியின்றியோ, எவர் பக்தியோடு என்னை உபாசிக்கின்றனரோ, அவர்களுக்கு நான் மகிழ்ச்சி யோடு அதற்குத் தக்க பலனைக் கொடுக்கின்றேன். இதில் சந்தேகமில்லை.
*****23.7.2024
"அபிசேத்ஸு துராசாரோ பஜதே மாமநந்ய பாக்| ஸாதுரேவ ஸமந்தவ்யஸ் ஸம்யக் வ்யவஸிதோ ஹிஸ:||" (7)

பொருள்:
ஸுதுராசார: அபி சேத் - தீய நடத்தையுள்ளவனாயினும், மாம் - என்னை; அநந்ய பாக் - வேறெந்தப் பற்றுமில்லாதவனாக; பஜதே - பூஜிக்கின்றானோ; ஸ: அவன்; ஸாது: ஏவ - சாது என்றே; மந்தவ்ய:- எண்ணத்தக்கவன்; ஹி - ஏனெனில்; ஸ: - அவன்; ஸம்யக் வ்யவஸித:- நல்ல திட சித்தமுடையவன்.

கருத்து:
தீய நடத்தையுள்ளவனாயினும், என்னை வேறெந்தப் பற்றுமில்லாதவனாக எவன் பூஜிக்கின்றானோ, அவன் சாது என்றே எண்ணத்தக்கவன். ஏனெனில் அவன் நல்ல திட சித்தமுடையவன் (என்னிடத்தில் சிரத்தையான பக்தியுள்ளவன்).

"ஸ்வஜீவத்வேந யோ வேத்தி மாமேவை மநந்யதீ:| தம் ந பஷ்யந்தி பாபாநி ப்ரஹ்மஹத்யாதி காந்யபி||" (8)

பொருள்:
ய: - எவன்; 
அநந்ய தீ:- வேறெதிலும் மனதைச் செலுத்தாதவனாக; 
மாம் ஏகம் ஏவ - என் ஒருவனையே; ஸஜீவத் வேந - தனது ஜீவனாய்; 
வேத்தி - அறிகின்றானோ; 
தம் - அவனை; 
ப்ரஹ்மஹத்யாதிகாநபி - பிரம்மஹத்தி முதலான; 
பாபாநி - பாபங்களும்; 
நஸ்ப்ருஷந்தி - தீண்டுவதில்லை.

கருத்து:
எவன் வேறெதிலும் மனதைச் செலுத்தாதவனாக என் ஒருவனையே, தனது ஜீவனாய் அறிகின்றானோ, அதாவது ஏக பக்தியுடன் சிந்தனையுடன் இருக்கிறானோ, அவனை பிரம்மஹத்தி முதலான எந்த பாபங்களும் தீண்டுவதில்லை.

உபாஸாவிதயஸ் தத்ர சத்வார: பரிகீர்திதா:| ஸம்பதாரோப ஸம்வர்காத்யாஸா இதி மநீஷிபி:|| (9)

பொருள்:
தத்ர - அதில்; 
உபாஸாவிதய:- உபாசனை செய்யும் விதிகள்; 
ஸம்பதாரோப ஸம்வர்காத்யாஸா:- சம்பத், ஆரோபம், சம்வர்க்கம், அத்யாசம்; இதி - என்று; சத்வார:- நான்கு விதங்களாக; 
மநீஷிபி: - சான்றோர்களால்; 
கீர்திதா: சொல்லப்பட்டுள்ளன.

கருத்து:
உபாசனை செய்யும் முறைகள், நான்கு விதங்களாக சான்றோர்களால் சொல்லப்பட்டுள்ளன. அவை சம்பத், ஆரோபம், சம்வர்க்கம், அத்யாசம் என்பன.

"அல்பஸ்யசாதிகத்வேந குணயோகாத் விசிந்தநம்:| அநந்தம்வை மந இதி ஸம்பத்விதிருதீரித:||" (10)

பொருள்:
அல்பஸ்ய - அற்பமாயுள்ளதை; குணயோகாத் - குண சம்பந்தத்தால்; அதிகத் வேந - பெரியது என்று; 
மந: - மனம்; 
அநந்தம்வை - பரப்பிரம்மம் ; 
இதி - என்று; 
விசிந்தநம் சிந்திப்பது; 
ஸம்பத்விதி: - சம்பத் உபாசனை என்று; உதீரித:- சொல்லப்பட்டுள்ளது.

கருத்து:
அற்பமாயுள்ளதை குணசம்பந்தத்தால் பெரியது என்று சிந்திப்பது, மனம் பரப்பிரம்மம் என்று நினைப்பது, சம்பத் உபாசனை என்று சொல்லப்பட்டுள்ளது.

"விதாவாரோப்ய யோபாஸா ஸாரோப: பரிகீர்தித:| யத்வதோங்கார முத்கீத முபாஸீதேத்யுதாஹ்ருத:||" (11)

பொருள்:
விதௌ - விதியில் (கர்மானுஷ்டான சடங்குகளில் சொல்லப்பட்டுள்ளபடி); ஆரோப்ய - அனுசரித்து: யா யாதொரு; உபாஸா - உபாசனை உள்ளதோ; ஸா - அந்த உபாசனையானது; ஆரோப: - ஆரோபம் என்று; பரிகீர்தித:- சொல்லப்பட்டுள்ளது; யத்வத - எவ்வாறெனில்; ஓங்காரம் - ஓம் என்னும் மந்திரத்தை; உத்கீதம் - உரத்த குரலில்; உபாஸீத - உபாசனை செய்க; இதி -என்று;உதாஹ்ருத சொல்லப்பட்டுள்ளது.

கருத்து:
கர்மானுஷ்டான விதிமுறைகளில் சடங்குகளில் சொல்லப் பட்டுள்ளபடி, அதை அனுசரித்து, யாதொரு உபாசனை உள்ளதோ அந்த உபாசனையானது 'ஆரோபம்' என்று சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக, ஓம் என்னும் மந்திரத்தை உரத்த குரலில் உபாசனை செய்க என்று சொல்லப்பட்டு உள்ளது. அதையனுசரித்து அவ்வாறு செய்வது 'ஆரோபம்'. 

"ஆரோபோ புத்தி பூர்வேண ய உபாஸா விதிஷ்ச ஸ:| யோஷித்யக்நி மதிர்யத்த தத்யாஸ: ஸஉதாஹ்ருத:||" (12)

பொருள்:
புத்திபூர்வேண - புத்தி பூர்வமாக; ய - யாதொரு; ஆரோப - ஆரோபம் உள்ளதோ; ஸ உபாஸாவிதி - அந்த உபாசனை விதி; யோஷிதி - பெண்ணிடம்; யத் - யாதொரு; அக்நிமதி: - அக்நிபுத்தி செய்வதுவோ; தத் அத்யாஸ: - அத்யாஸம் என்று; உதாஹ்ருத: பட்டுள்ளது. அஃது; சொல்லப்

கருத்து:
புத்திபூர்வமாக யாதொரு ஆரோபம் உள்ளதோ, அந்த உபாசனை விதி, பெண்ணிடம் அக்னிபுத்தி செய்வது. அது "அத்யாசம்" என்று சொல்லப்பட்டுள்ளது.

விளக்கம் :
கர்மாஷ்னுஷ்டான முறைகளில் உள்ளபடி செய்வது "ஆரோபம்" என்று முந்தைய ஸ்லோகத்தில் சொல்லப்பட்டது. அதே கர்மானுஷ்டானத்தில் சொல்லப்பட்டுள்ளதான ஹோமம் முதலானவற்றுக்கு "அத்யாசம்" என்று பெயர்.

இதை மனைவியுடன் சேர்ந்து செய்வது. மனைவிக்கென்று இதில் சில கிரியைகள் உள்ளன. இதையே இந்த ஸ்லோகம் கூறுகிறது.
*****31.7.2024
"க்ரியா யோகேந சோபாஸா விதிஸ்ஸம்வர்க உச்யதே ! ஸம் வர்த வாயு: ப்ரளயே பூதாந்யேகோவஸீத்தி||" (13)

பொருள்:
க்ரியா யோகேந - கிரியா யோகத்தினால்; உபாஸா விதி: உபாசிக்கும் முறை; ஸம்வர்க: - சம்வர்க்கம் என்று; உச்யதாம் சொல்லப்படுவது; ப்ரளயே - பிரளய காலத்தில்; பூதாநி பூதங்களை; ஸம்வர்த்த: - சம்வர்த்தம் என்னும்; வாயு: ஏக: வாயு ஒன்றே; அவஸீததி - அடக்கிக் கொள்கின்றது.

கருத்து:
பிரளயத்தில், ஸம்வர்த்த வாயு ஒன்றே எல்லா பூதங்களையும் தன்னுள் அடக்கிக் கொள்கின்றது. அதுபோல கிரியா யோகம் ஒன்றினால் மட்டுமே உபாசிக்கும் முறை 'சம்வர்க்கம்' எனப்படும்.

"உபஸங்கம்ய புத்யா யதாஸநம் தேவதாத்மநா| ததுபாஸநமந்தஸ்யாத் தத்பஹி: ஸம்பதாதய:||" (14)

பொருள்:
புத்யா - புத்தியினால்; தேவதாத்மநா - பரமாத்ம சொரூப மாக; உபஸங்கம்ய நன்கறிந்து; ஆஸநம் யத் - இருத்தல் என்பது எதுவோ; தத் அது; அந்த: உபாஸநம் - அந்தரு பாஸனம்; ஸ்யாத் - ஆகும்; ஸம்பதாதய: - சம்பத் முதலான உபாசனைகள்; பஹி: - வெளி உபாசனைகள்.

கருத்து:
புத்தியினால் தன்னை பரமாத்ம சொரூபமாக நன்கு அறிந்து இருத்தலே 'அந்தருபாசனம்' ஆகும். இது உள்முகமான உபாசனை முறை. சம்பத் முதலான உபாசனைகள் வெளி உபாசனைகள்.

"ஞாநாந்தராநம் தரித ஸஜாதி ஞான ஸந்ததே:| ஸம்பந்ந தேவதாத் மத்வம் உபாஸந முதீரிதம்||" (15)

பொருள்:
ஞாநாந்தராநம் தரித ஸஜாதி ஞானஸந்ததே: - வேறு எதனாலும் சலனப்படாமல் பரமாத்ம சொரூபம் ஒன்றையே நினைக்கும் பயிற்சியினால்; ஸம்பந்ந தேவதாத்மத்வம் - பரமாத்ம சொரூபத்தை நன்கறிந்திருத்தல்; உபாஸநம் உபாசனை என்று; உதீரிதம் - சொல்லப்பட்டுள்ளது.

கருத்து:
வேறு எதனாலும் சலனப்படாமல் பரமாத்ம சொரூபம் ஒன்றையே நினைக்கும் பயிற்சியினால் பரமாத்ம சொரூபத்தை நன்கறிந்திருத்தல் உபாசனை என்று சொல்லப் பட்டுள்ளது.

"ஸம்பதாதிஷு பாஹ்யேஷு த்ருட புத்தி ருபாஸநம்| கர்மகாலே ததங்கேஷு த்ருஷ்டிமாத்ர முபாஸநம்||" (16)

பொருள்:
ஸம்பதாதிஷு - சம்பத் முதலான; பாஷ்யேஷு- வெளி முகமானவற்றில்; த்ருட புத்தி: -உறுதியான புத்தியோடிருத் தல் ; உபாஸநம் உபாசனையாகும்; கர்ம காலே -கர்ம காலத்தில்; ததங்கேஷு - கர்மாங்க விஷயங்களில்; தருஷ்டி மாத்ரம் - நோக்கம் மாத்திரம் இருப்பதும்; உபாஸநம் - உபாசனையாகும்.

கருத்து:
சம்பத் முதலான வெளிமுகமான உபாசனைகளில், உறுதியான புத்தியோடிருத்தல் சிறந்த உபாசனையாகும்.

உபாசனை செய்யும்போது அதன் கிரியைகளிலேயே நோக்கமாக இருப்பதும்கூட உபாசனைதான்.

உதாரணமாக மந்திர ஜபம் செய்யும்போது, மந்திரங்களால் அங்க ந்யாசம், கரந்யாசம் முதலானவை செய்ய வேண்டும். பூஜை செய்யும்போது பகவானுக்கு அர்க்யம், பாத்யம் என்னும் 16 வகை உபசாரம் செய்ய வேண்டும். இவையெல்லாம் கிரியைகள்.

இந்த விஷயங்களைப் பற்றுதலோடு செய்வதும்கூட உபாசனையேயாகும்.

"உபாஸநமிதி ப்ரோக்தம் ததங்காநி பருவே ஷ்ருணு| தீர்த க்ஷேத்ராதி கமநம் ஸ்ரத்தாம் தத்ர பரித்யஜேத்||" (17)

"ஸ்வசித்தை காக்ரதா யத்ர தத்ராஸீத ஸுகம் த்விஜ:| கம்பளே மருதுதல்பே வாவ்யாக்ர சர்மணிவா ஸ்தித:||" (18)

பொருள்:
இதி - இவ்வாறு; உபாஸநம் உபாசனையானது; ப்ரோக்தம் -சொல்லப்பட்டது; ததங்காநி - அதன் பகுதி களை; ப்ருவே - சொல்லுகிறேன்; ஷ்ருணு - கேட்பீராக; தீர்த க்ஷேத்ராதி கமநம் - புண்ணிய தீர்த்தங்களுக்கும் புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் போதலையும்; தத்ர அதிலுள்ள; ஸ்ரத்தாம் - சிரத்தையையும்; பரித்யஜேத் - விட்டுவிட வேண்டும்; யத்ர - எவ்விடத்தில்; ஸ்வசிந்தைகாக்ரதா - தன் மனம் ஒரு முகப்படுதல் ஏற்படுகிறதோ; தத்ர - அங்கு; த்விஜா:- இருபிறப்பாளர்கள்; ஸுகம் சுகமாக; ஆஸீத் இருக்க வேண்டும்.

கருத்து:
உபாசனை எவை என்பது என்னால் சொல்லப்பட்டது. இனி, அதன் அங்கங்களை அதாவது பகுதிகளைப் பற்றி கூறுகிறேன், கேட்பீராக.

புண்ணிய தீர்த்தங்களுக்கும், புண்ணிய க்ஷேத்திரங் களுக்கும் போவதையும், போவதில் உள்ள பற்றுதலையும் விட்டுவிட வேண்டும். எந்த இடத்தில் தன்னால் மனதை ஒருமுகப்படுத்த முடிகிறதோ அங்கேயே சுகமாக இருக்க வேண்டும். ஏகாந்தமான இடத்தில், கம்பளதிலோ, மிருதுவான வஸ்திரத்திலாவது, புலித்தோலிலோ அமர்ந்து கொண்டு விபூதி தரித்து சகல இந்திரியங்களையும் அடக்கி கழுத்து தலை உடல் இவற்றை நேராக வைத்துக் கொண்டு பக்தியுடன் தனது குருவை வணங்கி குரு முகமாய் அறிந்தபடி நியமத்தோடு யோகாப்யாசம் செய்ய வேண்டும் 
*****13.8.2024
"விவிக்த தேஷே நியதஸ் ஸமக்ரீவ ஷிரஸ்தநு:| அத்யாஸ்ரமஸ்தஸ் ஸகலாநீந்த்ரியாணி நிருத்யச||" (19)

பொருள்:-
சாந்தமான இடத்தில் கம்பளத்திலாவது, மிருதுவான ஸ்கித்திலாவது, புலித்தோலிலாவது அமர்ந்து கொண்டு, தலைக்குரிய முறைப்படி திருமண காப்போ, விபூதியோ தரித்து, சகல இந்திரியங்களையும் அடக்கி, கழுத்து, தலை, உடல் இவற்றை நேராக வைத்துக் கொண்டு, பக்தியோடு தனது குருவை வணங்கி, குரு முகமாய் அறிந்தபடி நியமத் தோடு யோகாப்யாசம் செய்ய வேண்டும்.

"பக்த்யாத ஸ்வகுரும் நத்வா யோகம் வித்வாம் ஷ்ச யோஜயேத்| யஸ்த்வ விக்ஞாநவாந் பவத்யவ்யக்த மநஸா ஸதா:||" (20)

"தஸ்யேந்த்ரி யாண் யவஸ்யாநி துஷ்டாஷ்வா இவ ஸாரதே:|

பொருள்:-
எப்போதும் மோகம் கொண்ட மனதோடு, அறிவற்ற வனாக எவன் இருக்கின்றானோ, அவனுடைய இந்த்ரியங்கள், தேர்ப்பாகனுக்கு அடங்காத குதிரைகள் போல அடங்கா திருக்கும்.

விஞ்ஞாநீயஸ்து பவதி யத்நே ந மநஸா ஸஹ||" (21)

"தஸ்யேந்த்ரியாணி வஷ்யாநி ஸதஷ்வா இவ ஸாரதே:| 

பொருள்:-
யாதொருவன் முயற்சியினால் அறிவு பெற்றவனாக ஆகின்றானோ அவனுக்கு, தேர்ப்பாகனுக்கு நல்ல குதிரைகள் அடங்கி நடப்பதுபோல, மனதோடுகூட இந்திரியங்கள் அடங்கி நடக்கும்.

யஸ்த்ல விஞ்ஞாநவாந் பவத்ய மநஸ்கஸ்ஸதா ஷுசி:||" (22)

"ந ஸ தத்பதமாப்நோதி ஸம்ஸாரமபி கச்சதி|

பொருள்:
யாதொருவன் அறிவற்றவனாகவும், மனம் வசப்படாத வனாகவும், காமம், குரோதம் முதலானவற்றோடு இருக் கின்றானோ, அவன் அந்த மேலான பரமபதத்தை அடைய மாட்டான்; சம்சாரத்தையே அடைவான்.

"விஞ்ஞாநீ யஸ்து பவதி ஸமநஸ்கஸ் ஸதா ஷுசி:||" (23)

"ஸ தத்பதமவாப்நோதி யஸ்மாத் பூயோ நஜாயதே| 

பொருள்:-
யாதொருவன் அறிவுடையோனாகவும், மனம் வசப் பட்டவனாகவும், எப்போதும் காம மோகங்களற்ற சுத்த னாகவும் இருக்கின்றானோ, அவன் எந்தப் பதத்தை அடைந் தால் மீண்டும் பிறப்பதில்லையோ, அந்த பரமபதத்தை அடைகின்றான்.

விஞ்ஞாந ஸாரதிர் யஸ்து மந: ப்ரக்ரஹ ஏவச||" (24)

"ஸோத்வந: பாரமாப்நோதிம மைவ பரமம்பதம்| 

பொருள்:-
யாதொருவன் அறிவு என்னும் தேரோட்டியையும், மனம் என்னும் கடிவாளத்தையும் கொண்டவனாக இருக்கின் றானோ, அவன் பாதையின் முடிவாகிய எனது மேலான பதத்தை அடைகின்றான்.

ஹ்ருத் புண்டரீகம் விரஜம் விஷுத்தம் விஷதம் ஸதா||" (25)

"விஷோகம் ச விசிந்த்யாத்ர த்யாயேந் மாம் பரமேஷ்வரம்| அசிந்த்ய ரூபம(அ)வ்யக்த ம(அ)நந்த ம(அ)ம்ருதம் ஷிவம்||" (26)

"ஆதிமத்யாந்தரஹிதம் ப்ரஷாந்தம் ப்ரஹ்ம காரணம்| ஏவம் விபும் சிதாநந்தம ரூபமஜமத்புதம்||" (27)

"ஷுத்த ஸ்படிக ஸம்காஷம் உமாதேஹார்த தாரிணம்| வ்யாக்ர சர்மாம்பரதரம் நீலகண்டம் த்ரிலோசந||" (28)

ஜடாதரம் சந்த்ர மௌளிம் நாக யக்ஞோப வீதிநம்| வ்யாக்ர சர்மோத்தரீயம் ச வரேண்ய ம(அ)பயப்ரதம்||" (29)

பராப்யா மூர்த்வ ஹஸ்தாப்யாம் பிப்ராணம் பரஷும் ம்ருகம்| பூதிபூஷித ஸர்வாங்கம் ஸர்வாபரண பூஷிதம்||" (30)

பொருள்:-
சோகமில்லாததும், விருப்பு வெறுப்புக்களற்றதும் மிக்க சுத்த சொரூபமாயுள்ளதும், பிரகாசமாயுள்ளதுமான இதய கமலத்தை நன்கு சிந்தித்து, அந்த இதயகமலத்தில், சிந்தனைக் கெட்டாத வடிவுடையவனும், தோற்றம் என்று ஒன்றில்லாதவனும், முடிவு என்று ஒன்றில்லாதவனும், அழிவற்றவனும், மங்களமானவனும், ஆரம்பம், நடு, முடிவுகள் அற்றவனும், சாந்திமயமானவனும், அனைத்துக்கும் காரணமானவனும், பிரம்மனும், எங்கும் வியாபித்திருப் பவனும், ஞானமயமானவனும், உருவமற்றவனும், பரமேஸ் வரனும் அற்புதமானவனும், சுத்தமான ஸ்படிகம் போன்ற வனுமான என்னை, உமாதேவியைப் பாதி உடலாய்க் கொண்டவனும் புலித் தோலை ஆடையாயணிந்தவனும், கறுத்த கழுத்தை உடைய வனும், முக்கண்ணனும், ஜடையோடு விளங்குபவனும், சந்திரனைத் தலையில் சூடியிருப்பவனும், நாகத்தைப் பூணூலாய் அணிந்திருப்பவனும், மிகவும் மேலானவனும், அபயம் தரும் ஒரு கரத்தோடு, மற்றுமுள்ள மேல்நோக்கி யுள்ள கரங்களால் கோடரியையும், மானையும் தரித்திருப் பவனும், விபூதி பூசப்பட்ட சர்வாங்கமுடையவனும், சகல ஆபரணங்களையுமணிந்திருப்பவனும்"
என்று இவ்வாறுள்ள என்னை தியானம் செய்க.

விளக்கம்:
தியானம் செய்யச் சொல்லும் சிவபெருமான் அதற் குரிய வழிமுறைகளைக் கூறுகிறார்.

முதலில் தியானம் செய்பவன் தன் மனத்தை சுத்த மாக்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது சிவபெருமானின் அரூபமான சச்சிதானந்த வடிவத்தை அறிய வேண்டும்.

மூன்றாவதாக, சிவபிரானின் வடிவத்தை, நான்கு திருக்கரங்களோடு, மங்கள சொரூபியாய் அவர் இருக்கும் வடிவத்தை தியானிக்க வேண்டும் என்கிறார்.

எனவே, ஆரம்பத்தில் தியானத்துக்கு உருவம் அவசியம். 

"ஏவமாத்மாரணிம் க்ருத்வா ப்ரணவம் சோத்தராரணிம்| த்யாந நிர்மதநாப்யாஸாத் ஸாக்ஷாத் பக்ஷ்யதி மாம் ஜந:||" (31)

பொருள்:
இவ்வாறு மனிதன் ஆத்மாவை அரணியாகவும் ஓம் என்னும் மந்திரத்தை மேல் அரணியாகவும் செய்து தியான மாகிய கடைதலைவிடாது செய்வதால் என்னை நேராக தரிசிக்கின்றான்.

விளக்கம்:
இரண்டு அரணிக்கட்டைகளை எடுத்து, ஒன்றோடு ஒன்று தேய்க்கும்போது நெருப்பு உண்டாகும். இங்கே ஆத்மாவை ஓர் அரணிக்கட்டையாகவும் 'ஓம்' என்னும் மந்திரத்தை மற்றோர் அரணிக்கட்டையாகவும் சொல்லப் பட்டுள்ளது. அங்கே அரணிக்கட்டைகளைத் தேய்த்தால் நெருப்பு தோன்றும். இங்கே சிவதரிசனம் கிட்டும்.

"வேத வாக்யைரலப்யோஹம் ந ஷாஸ்த்ரைர் நாபிசேதஸா| நாவிரதோ துஷ்சரிதாந் நாஸாந்தோ நாஸமாஹித:||" (32)

"நாஸாந்தமாநஸோ வாபி ப்ரக்ஞாநேநை நமாப்நுயாத்|"

பொருள்:
நான் வேதவாக்கியங்களால் அடையக் கூடியவனல்ல. சாஸ்திரங்களால் அடையக்கூடியவனல்ல. மனதாலும் அடையக் கூடியவனல்ல. தீய காரியங்களிலிருந்து விடுபடாதவன் அடைகின்ற தில்லை. ஏகாக்ர சித்தமில்லாதவன் அடைகின்றதில்லை. அமைதியற்ற மனமுடையவனும் அடைகின்றதில்லை.

பிரம்ம ஞானாத்தினாலேயே அடையலாம்.

"ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்த்யாதி ப்ரபஞ்சோய:| ப்ரகாஷதோ தத் ப்ரஹ்மாஹமிதி ஞாத்வா ஸர்பந்தை: ப்ரமுச்யதே||" 

பொருள்:



Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்