சிவ சஹஸ்ரநாமம் ருத்ர யாமளம் அந்தர்கதம் - உத்திரபாக ஸ்லோகங்கள்
உத்திரபாகம் - பலஸ்ருதி
"ஏவமேதாநி நாமாநி முக்யாநி மம ஷண்முக| ஸுபதாநி விசித்ராணி கௌர்யை ப்ரோக்தானி ஸாதரம்||" (1)
பொருள்:- முருகனே! இம்மாதிரி சிறந்தவைகளையும் பக்தர்கள் விரும்பியதை கொடுக்க கூடியதுமான என்னுடைய நாமங்கள், கௌரீ தேவிக்கு சொல்லப்பட்டன
"ஏதந்நாம ஜபேத் யோக்யோ விப்ராதிஸ்ச முநீஸ்வரா:| ஸுசிர்பூத்வா ஸிவபரோ நாந்யாராத நமோஹித:|| (2)
பொருள்:- பிராமணர்கள் முனிவர்கள் மற்றும் இதற்கு தகுதி உள்ள தூய்மையான உள்ளத்தோடு கூட இந்த நாமாக்களை ஜபிக்க வேண்டும்.
"பிபூதி பூபிதவபு: ஸுத்தோ ருத்ராஷபூஷண:|
ஸிவலிங்க ஸமீபஸ்தோ நி:ஸங்கோ நிர்ஜிதாஸந:||" (3)
பொருள்:- உடல் முழுவதும் திருநீறு அணிந்து ருத்ராக்ஷம் தரித்து கொண்டு சிவலிங்கத்தின் அருகில் இருப்பவனாய் தனிமையில் ஜபிக்க வேண்டும்.
"ஏகாக் ரசித்தநியதோ வஸீ பூ தஹிதேரத:|
ஸிவலிங்கார்சகோ நித்யம் ஸிவைகஸரண: ஸதா||" (4)
பொருள்:- மனதை இதிலேயே செலுத்தி புலன்களை அடக்கி ஜீவர்களிடத்தே கருணையோடு, சிவலிங்கத்தை நித்யம் பூஜித்து சரணமடைய வேண்டும்.
"மம நாமாநி திவ்யாநி யோ ஜபேத் பக்திபூர்வகம்|
ஏவமுக்த குணோபேத: ஸ தே வை: பூஜிதோ பவேத்||" (5)
பொருள்:- இந்த என்னுடைய நாமங்களை எவனொருவன் பக்தியுடன் ஜபிக்கின்றானோ அவன் தேவர்களாலும் வணங்கப்பட்டவனாக ஆவான்.
"ஸம்ஸாரபாஸ ஸம்பந்த ஜநமோஷைக ஸாதநம்| யந்நாம ஸ்மரணம் நூநம் ததேவ ஸகலார்த்தம்||" (6)
பொருள்:- இந்த நாமங்களை நினைபதாலேயே ஸம்ஸாரம் என்கிற கட்டிலிருந்து விடுபட்டு நிச்சயம் எல்லாவற்றையும் அடைவான்
"மந்நாமைவ பரம் ஜப்யமஹமேஷாயார்த்த:|
அஹமேவ ஸதா ஸேவ்யோ த்யேயோ முக்த்யர்த்த மாதராத்|" (7)
பொருள்:- மேலான இந்த என்னுடைய நாமங்கள் ஜபிக்கத் தக்கவை. இது அழிவற்ற செல்வத்தை கொடுக்கும். என்னை தியானித்து வணங்குகிறவன் மோஷத்தை அடைவான்.
"விபூதி வஜ்ரகவசை: மந்நாமஸரபாணிபி:|
விஜய: ஸர்வதா லப்யோ ந தேஷாம் வித்யதே பயம்||" (8)
பொருள்:- விபூதியை கவசமாக கொண்டு என்னுடைய நாமங்களை பாணம் போல் வைத்திருப்பவன் எப்பொழுதும் வெற்றியையே அடைவான் பயம் இருக்காது.
"ஹே முக்திதாயக மஹேச பிநாகபாணே ஸம்போ கிரீஸ ஹர சங்கர சந்த்ரமௌலே| விஸ்வேஸ்வராந்த கரிபோ புரஸூத நேதி மாமர்சயந்த்யநுமுதந்தி த ஏவ தந்யா:||" (9)
பொருள்:- மோஷத்தை கொடுப்பவனே! பிநாகம் என்ற வில்லை கையில் கொண்ட கிரீச, ஹர, சங்கர, சந்திரமௌலி, விஸ்வேஸ்வர, அந்தகனை கொன்றவரே, முப்புரத்தை எரித்தவரே என்று என்னை அர்ச்சனை செய்பவர்கள் பிறவிப் பயனை பெறுவார்கள்.
"தேவேஸு தேவ ஜகதீஸ்வர பஞ்சவக்த்ர ஸோமபாக் நிபாநுநயநாக் நிகஸுலபாணே| கௌரீமநோ ரமண மாமரிஸுத நேதி யே சார்சயந்த்யநுமுதந்தி த ஏவ தந்யா||" (10)
பொருள்:- தேவர்களுக்கு ஈசனே, தேவனே. உலகிற்கு தலைவனே, ஐந்து முகம் கொண்டவரே, சூரியன் சந்திரன் அக்னி மூன்றையும் கண்களாக கொண்டவரே, சூலத்தை கையில் கொண்டவரே கௌரீ தேவியின் மனதிற்கு மகிழ்ச்சி தருபவரே, பகைவர்களை அழிப்பவரே என்று என்னை அர்ச்சனை செய்பவர்கள் நற்பேறு பெறுவர்
*****
நமஸ்தே நமஸ்தே மஹாதேவ சம்போ நமஸ்தே நமஸ்தே ப்ரபந்நைக பந்தோ|
நமஸ்தே நமஸ்தே தயாஸாரவிந்தோ நமஸ்தே நமஸ்தே நமஸ்தே மஹேஸ||(43)
"வேதாந்த வேத்யாய மஹோதயாய கைலாசவாஸாய ஸிவாதவாய|
ஸிவஸ்வரூபாய ஸதாஸிவாய ஸிவாஸமேதாய நம: ஸிவாய" (56)
பொருள்:- வேதாந்தங்களால் அறியக் தக்கவரும் மிகவும் உயர்ந்தவரும் திருக்கயிலாய மலையில் வசிப்பவரும் அம்பிகையின் கணவரும் மங்கள வடிவினரும் அனுக்ரஹ மூர்த்தியாகிய ஸதாசிவரும் அம்பிகையோடு கூடியவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்..
ஸ்கந்த உவாச:-
"ஸாம்ப ஸம்போ மஹாதேவ தயாஸாகர ஸங்கர| மச்சித்தப் ரமரோ நித்யம் தவாந்து பதபங்க ஜே (60)
ஸூத உவாச:-
"இதி தத்வா வராநிஷ்டாந்ஸாம்ப: ஸம்ஸாரமோசக:| தஸ்தாவதீவ ஸந்துஜஅடோ ப்ரஹ்மவிஷ்ணாவாதி ஸேவித:||" (70)
பொருள்:- அம்பிகையுடன் கூடியயவரும் சம்சாரக் கட்டிலிருந்து விடுவிப்பவரும், ப்ரஹ்மா விஷ்ணு இவர்களால்பூஜிக்கப் படுபவருமாகிய சிவபிரான் இவ்வாறு இஷ்டமான வரங்களை அளித்தருளி மகிழ்சியுடனிருந்தார்.
"பவந்தோபி முநிஸ்ரேஷ்டா: ஸாம்ப த்யாநபராயணா:| ஸிவநாம ஜபம் க்ருத்வா திஷ்டந்து ஸுகிந: ஸதா||" (71)
பொருள்:- உயர்ந்த முனிவர்களே, நீங்களும் அம்பிகையோடு கூடிய சிவபெருமானை தியானிப்வர்களாக சிவநாம ஜபம் செய்து எப்பொழுதும் சுகமுள்ளவர்களாக இருங்கள் (72)
ஜந்மாந்தரஸஹஸ்ரேஷு யதி தப்தம் தபஸ்ததா| தஸ்ய ஸ்ரத்தா மஹாதேவ பக்திஸம் பவதி த்ருவம்(75)
ஆயிரக்கணக்கான பிறவிகளில் தவம் செய்திருந்தால் மட்டுமே மஹாதேவரிடத்தில் சிரத்தையும் பக்தியும் உறுதியாக ஏற்படும். "உறுதியாக" என்ற வார்த்தை முக்கியம் இங்கே.
முக்திதாதா மஹாதேவோ தந்யோ நாஸ்த்யேவ ஸர்வதா| ஸத்யமேதத்புந: ஸத்யம் ஸத்யமேவ ந ஸம்ஸய:||(76)
பொருள்:- மோஷத்தை அருளுபவர் மஹாதேவர். இவருக்கு இணையாக யாருமில்லை. இதுவே சத்யம், மீண்டும் சத்யம். இதுவே சத்யம். இதில் சந்தேகம் இல்லை. (மும்முறை சத்யம், அதாவது முக்காலும் உண்மை என்று கூறியதாயிற்று)
ஸுபகா ஜநநீ தஸ்ய தஸ்யைவ குலமுந்நதம்| தஸ்யைவ ஜந்மஸபலம் த்ருஸ்ய: ஸம்பு: ஸதாசிவ:||(77)
பொருள்:- எவனொருவன் சிவபக்தி செய்கிறானோ, அவனுடைய தாயே ஸௌக்கியம் உள்ளவள். அவனுடைய குலமே உயர்ந்தது. அவனுடைய பிறவியே பயனுள்ளதாகிறது. சம்புவாகிற ஸதாசிவனே தரிசனம் செய்யத்தக்கவர்.
யே ஸம்பும் ஸுரஸத்தமம் ஸுரகணைராராத் யமீஸம் ஸிவம்
ஸைலாதீ ஸஸுதாஸமேதமமலம் ஸம்பூஜ்யந்த்யாத் ராத்| தே தந்யா: ஸிவபாத பூஜநபரா தந்யா ந சாந்யே ஜநா: ஸத்யம் ஸத்யமிவோச்யதே முநிவரா: ஸத்யம் புந: ஸத்யம் ஸத்யமிவோச்யதே முநிவரா: ஸத்யம் புந: ஸர்வதா||(78)
பொருள்:- சம்புவும் மங்களமானவரும் மலையரசன் மகளோடு கூடியவரும் மாசற்ற சிவபெருமானை எவர் பரிவுடன் பூஜை செம்கிறார்களோ, அவர்களே பிறவிப் பயனை அடைந்தவர்கள். பிறவிப் பெருங்கடலை கடக்க முடியும். அவர்களே உயர்ந்தவர்கள், மற்றவர்கள் அல்ல. எப்பொழுதும் இது உண்மையாகும்.
ரிஷிருவாச:-
"த்வத்ப்ரஸாதாதிதம் ஸூத விஸ்வஸந்தோ ந ஸம்ஸயா|
தந்யா க்ருதாஸ்த்வயா நூநம் ஸத்கதாஸ்ரவணாத் வயம்" (79)
பொருள்:- ரிஷி கூறினார், சூதரே தங்களது அருளினாலேயே எங்களுக்கு சந்தேகமற்ற நம்பிக்கை உண்டாகியது. தங்களால் நல்ல விஷயங்களை கேட்கும்படிச் செய்யப்பட்டதன் மூலம் பிறவிப் பயனை அடைந்தவர்களாக ஆனோம். இது நிச்சயம்.
- இதி ருத்ர யாமள சிவரஹஸ்ய: ஏழாவது அம்சத்தில் குமார - சிவ ஸம்வாதத்தில் சிவ சஹஸ்ரநாமம் சம்பூர்ணம்.
ஸிவ ஸஹஸ்ரநாமகதநம் நாம ப்ரதமோத்யாய:
ஸர்வதோ ஜயமங்களம்
ய: ஸிவ நாமரூபாப்யாம் யாதேவீ ஸர்வமங்களா| தயோ: ஸம்ஸமரணாத் பும்ஸாம் ஸர்வதோ ஜயமங்களம்||
பொருள்:- சிவபெருமான் மங்கள வடிவானவர். அவர் பெயரும் மங்களம். அவர் எப்போதும் வழங்குவதும் மங்களம். தேவியோ சர்வ மங்களை, இவர்கள் இருவருரையும் தியானம் செய்யுபவர்கள் எப்பொழுதும் ஜயத்தையும், மங்களத்தையுமே அடைகின்றனர்.
*****
"ம்ருகேந்தர சர்மவ்யஸநோ நாரஸிம்ஹ நிபாதந:| ம்ருத்யுஞ்ஜயோ ம்ருத்யும் ருத்யுரபம் ம்ருத்யு விநாசக:||"
பொருள்:- சிங்கத்தின் தோலை உடையாகக் கொண்டவர். புலியின் தோலை உடுத்தியவர். நரசிம்ஹரை வீழ்த்தியவர். ( "ஹ்ரீம் ஹரந்தமனுயந்தி தேவா:" என்கிறது வேதம். சிவபெருமான் சரப மூர்த்தியாக தோன்றி நரசிம்ஹரை அடக்கியதாக கூறுகிறது.) யமனை வென்றவர். காலனுக்கு காலன். அகாலத்தில் ஏற்படும் மரணத்தை தவிர்ப்பவர்.
*****
Comments
Post a Comment