ஸ்ரீ சிவ சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ ருத்ரயாமல - பூர்வாங்க ஸ்லோகங்கள்
ஸ்ரீ சிவ சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ ருத்ரயாமல அந்தர்கதம். சிவஞான போதினி என்னும் தமிழ் உரை..சிவ ரஹஸ்யத்தில் கிடைக்கிறது.
*****
வேதங்கள், எங்கும் நிறைந்த பரம்பொருளை தன்னுள்ளே பிரம்ம சாஷாத்காரம் பெற்று விளங்கச் சொல்கின்றன. இந்த நிலையை எட்ட முடியாதவர்களுக்கு உருவ வழிபாட்டையும் கூறுகின்றன. மங்களமூர்த்தியான பரமேஸ்வரனையே எல்லாவற்றுக்கும் மேலானவராக, உலகத்தை கடந்தவராக, மங்களத்தை வாரி வழங்குபவராக பேசியிருக்கிறது.
க்ருஷ்ண யஜுர் வேதம், தைத்ரீய ஸம்ஹிதை, நாலாவது காண்டம், ஐந்தாவது பிரச்னம் முழுவதும் ருத்ரரூபியான பரமேஸ்வரனைப் புகழ்ந்து பேசியிருக்கிறது. இம்மாதிரி ஒரு பிரச்னம் முழுவதும் வேறு எந்த தெய்வத்துக்கும் சொல்லப்படவில்லை. மேலும் ஆறாவது காண்டம், இரண்டாவது பிரச்னத்தில் திரிபுரஸம்ஹார வரலாறு நன்கு வர்ணிக்கப்படுகிறது. தைத்திரீய ஆரண்யகம் பத்தாவது பிரச்னத்தில் நிறைய சிவபரமாய் மந்திரங்கள் உலகத்துக்கு மேற்பட்டவனாயும் எங்கும் நிறைந்திருப்பனாகவும் மஹரிஷி, ருத்ரன், பரமேஸ்வரன் என்றெல்லாம் பாடியிருக்கிறது.
பாரதம், ராமாயணம் முதலிய இதிஹாசங்கள், ஸ்காந்தம் முதலிய பதினெட்டு புராணங்கள், சைவ ஆகமங்கள் எல்லாம் சிவபரத்துவத்தை பற்றி மிகவும் விரிவாகவே பேசியிருக்கின்றன. ஆகவே சிவ வழிபாடு எல்லாவற்றிலும் சிறந்தது என்பது பெறப்பட்டது. சிவ சஹஸ்ரநாம ஸ்தோத்ரங்கள் பல இருக்கின்றன.
வேத மந்திரங்களாலேயே "ருத்ரத்ரிசதி" என்ற பெயரால் முன்னூறு அர்ச்சனைகள் சிவபெருமான் மேல் உள்ளன. மற்ற எக்கடவுள்களுக்கும் இத்தகைய உயர்ந்த ஸ்தானம் வேதத்தில் இருப்பதாக தெரியவில்லை.
மிக அரிதாக ஒரு சிவ சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் (உரை) எழுத அவன் அருளை வேண்டித் தொடங்குகிறேன்.
ஆசிரியர் முகவுரை..
ப்ரம்மஸ்ரீ P.N.நாராயண சாஸ்திரிகள்
"ஸர்வதோ ஜயமங்களம்
ய: சிவோ நாமரூபாப்யாம் யாதேவீ சர்வமங்களா|தயோ: ஸம்ஸ்மரணாத்பும்ஸாம் ஸர்வதோ ஜயமங்களம்||"
பொருள்:- சிவபெருமான் மங்கள வடிவானவர். அவர் பெயரும் மங்களம் எனும் பொருள் தரும் சிவம். அவர் வழங்குவதும் மங்களம். தேவியோ சர்வ மங்களை. இவர்கள் இருவரையும் தியானம் செய்யும் மனிதன் எங்கும் எப்போதும் ஜயத்தையும் மங்களத்தையுமே அடைகிறார்கள்.
இந்த அரிய "சிவ சஹஸ்ரநாம" ஸ்லோகங்களை பதிவு செய்கிறேன் எல்லோரும் படித்து சிவனருள் பெற வேண்டுகிறேன்..
பின் குறிப்பு - இதில் பூர்வபாகம் ஸ்லோகங்கள், பின் ஸஹஸ்ரநாமங்கள், பிறகு உத்திரபாகம் (பலஸ்ருதி) ஸ்லோகங்கள், இப்படியாக இருக்கிறது.
பூர்வபாகத்தில் - 44 ஸ்லோகங்கள் ஸஹஸ்ரநாமம் - 1000 - நாமாக்கள், உத்திரபாகம் - பலஸ்ருதியில் 80 ஸ்லோகங்கள் வருகிறது..
என்றும் சிவகைங்கர்யத்தில்..சிவ சிவ 🙏
*****
பூர்வபாகம்
வியாஸ முனிவரின் சீடரும் புராணங்கள் சொல்லுவதில் சிறந்தவருமான சூத முனிவரைப் பார்த்து மஹரிஷிகள் வேண்டிக் கொள்கிறார்கள்..
ரிஷய உவாச:-
"ஸூத வேதார்த்த தத்வஜ்ஞ ஸிவ த்யாநபராயண| முக்த்யுபாயம் வதாஸ்மாகம் க்ருபாலோ முநிஸத்தம||" (1)
"க:ஸேவ்யா: ஸர்வ தேவேஷு கோ வாஜாப்யோ மநு: ஸதா| ஸ்தாதவ்யம் குத்ரவாநித்யம் கிம் வா ஸர்வார்த்த ஸாதகம்||" (2)
பொருள்:- சூத முனிவரே, வேதப் பொருளின் தத்துவத்தை உணர்ந்தவரே, சிவத்யானபரராய் விளங்குபவரே, முக்தியுபாயத்தை எங்களுக்கு கிருபையுடன் கூறி அருள வேண்டும். எல்லா தேவர்களுக்குள்ளும் எவர் சேவிக்கத்தக்கவர், எப்பொழுதும் எந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்? எவ்விடத்தில் வசித்தால் விரும்பிய எல்லாம் கிடைக்கும்?
ஸூத உவாச:-
"தந்யாந்மந்யாமஹே நூதமநந்ய ஸரணாந்முநீந்| வந்யாஸிநோ வநாவாஸாந் நயஸ்தமந்யூ நகல்மஷாந்||" (3)
"பவத்பி: ஸர்வ வேதார்த்த தத்வம் ஜ்ஞாதமகல்மஷை:| பராத்பரதர: ஸர்வ: ஸர்வதா பூஜ்யதே தியா(4)
பவத்பி: ஸர்வவேதார்த்தோ ஜ்ஞாத ஏவாஸ்தி யத்யபி| ததாபி கிஞ்சித் வக்ஷ்யாமி யதா ஜ்ஞாதம் மயா ததா|| (5)
சூத உவாச:-
காட்டிலேயே வசித்து அங்கு கிடைப்பதயே உணவாகக் கொண்டு, பாபமற்றவர்களாக சகல வேதங்களின் பொருள்களை அறிந்தவர்களாகவும் இருந்து கொண்டு, எல்லாவற்றிற்கும் மேலானவரான சிவபெருமானையே பூஜித்து வருகிறீர்கள். நானறிந்த வரை கூறுகிறேன்
Comments
Post a Comment