சிவ புராணம் - போற்றி திருவகவல்

திருச்சிற்றம்பலம்..!

நம: பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா!

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

பராய்த்துறை மேவிய பரனே போற்றி!

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!

சீரார் திருவையாறா போற்றி!

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி!

திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி!

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி!

இடைமருது உறையும் எந்தாய் போற்றி!

குற்றாலத்து எம் கூத்தா போற்றி!

கோகழி மேவிய கோவே போற்றி!

ஈங்கோய் மலை எம் எந்தாய் போற்றி!

பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி!

கடம்பூர் மேவிய விடங்கா போற்றி!

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!

பாகம் பெண்னுரு ஆனாய் போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி!

கயிலை மலையானே போற்றி போற்றி!

திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்! 🙏

Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்