சிவ சஹஸ்ரநாமம் பூர்வாங்க ஸ்லோகங்கள் 24-39 விளக்கத்துடன்
இது, மஹாபாரதம் அனுசாசன பர்வத்தில் முதலாவதாகிய தான தர்மங்கள் கூறும் ஸ்ரீ கிருஷ்ணர், இந்த சிவ சஹஸ்ரநாமம் பதினான்காம் அத்யாயத்தில் தொடங்குகிறது.
*****
ஸ்ரீ சிவஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்
கணபதி வந்தனம்:-
"சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்| ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோபசாந்தயே||"
குரு வந்தனம்:-
"நமோஸ்து தே வ்யாஸ விசாலபுத்தே
புல்லாரவிந்தாயத-பத்ர- நேத்ர| யேந த்வயா பாரததைல பூர்ண:
ப்ரஜ்வாலிதோ ஜ்ஞானமய: ப்ரதீப:||"
பொருள்:-
1. எங்கும் நிறைந்தவரும் - எனினும் அன்பர்க்குகந்த வடிவம் ஏற்பவரும், வெண்மையான ஆடை உடுத்தவரும், நிலவு போன்ற ஒளியுள்ளவரும் நான்கு கைகளுள்ளவரும், ஆனந்தம் பொங்கும் முக மண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக தியானம் செய்ய வேண்டும்.
2. விசாலமான புத்தியுடையவரும், மலர்ந்த தாமரையிதழ் போன்று பரந்த கண்களை உடையவருமான வியாஸரே! உமக்கு நமஸ்காரம். பாரதம் எனும் எண்ணெய்யால் நிறைந்த ஜ்ஞானமயமான சிறந்த விளக்கு உம்மாலல்லவா ஏற்றி வைக்கப்பட்டது?
"வந்தே சம்பு-முமாபதிம் ஸுரகுரும் வந்தே ஜகத் காரணம்| வந்தே பந்நக-பூஷணம் ம்ருகதரம் வந்தே பசூனாம் பதிம்|| வந்தே ஸூர்ய - சசாங்க -வஹ்னி -நயனம் வந்தே முகுந்த ப்ரியம்| வந்தே பக்தஜனாச்ரயஞ்ச வரதம் வந்தே சிவம் சங்கரம்||"
பொருள்:-
சம்புவும், உமாபதியும், தேவகுருவும், ஆகியவரை வணங்குகிறேன். உலகிற்குக் காரணமாகியவரை வணங்குகிறேன். பாம்பை ஆபரணமாய்க் கொண்டு கையில் மானை ஏந்தியிருப்பவரை வணங்குகிறேன். பசுபதியை வணங்கு கிறேன். சூரியனையும் சந்திரனையும் அக்னியையும் கண்களாய்க் கொண்டவரை வணங்குகிறேன். முகுந்தனுக்குப் பிரியமானவரை வணங்குகிறேன். பக்த ஜனங்களுக்குப் புகலிடமாயும், உயர் நலத்தை அளிப்பவராயும் உள்ளவரை வணங்குகிறேன். மங்கள வடிவினராகிய சிவனை, மங்களத்தைச் செய்பவரான சங்கரரை வணங்குகிறேன்.
*****
வாசுதேவ உவாச:-"தத: ஸ ப்ரயதோ பூத்வா மம தாத யுதிஷ்டிர:| ப்ராஞ்சலி: ப்ராஹ விப்ரர்ஷிர் நாமஸங்க்ரஹ மாதித:||" (24)
உபமன்யு உவாச:-
"ப்ரஹ்மப்ரோக்தைர் ருஷிப்ரோக்தைர் வேதவேதாங்க ஸம்ப்பவை:|
ஸர்வலோகேஷு விக்யாதம் ஸ்துத்யம் ஸ்தோஷ்யாமி நாமபி:||" (25)
"மஹத்பிர் விஹிதைஸ்ஸத்யை: ஸித்யை ஸர்வார்த்த ஸாதகை:| ருஷிணா தண்டினா பக்த்யா க்ருதைர் வேதக்ருதாதாமனா||" (26)
"யதோக்தை: ஸாதுபி: க்யாதைர் முனிபிஸ்தத்வதர்சிபி:|
பரவரம் ப்ரதமம் ஸ்வர்க்யம் ஸர்வபூதஹிதம் சுபம்:||" (27)
பொருள்:-
வாசுதேவர் கூறியது:-
யுதிஷ்டிரா, ப்ரஹ்ம மஹரிஷியான உபமன்யு மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு, கை கூப்பியவராக எனக்கு சிவ நாம ஸஹஸ்ரநாமத்தை ஆதியிலிருந்து கூறியருளினார்.(24)
உபமன்யு உவாச:-
வேதங்களினினிறும் வேத அங்கங்களினின்றும் உதித்தவையும், ப்ரஹ்மாவாலும், ரிஷிகளாளும் பாராயணம் செய்யப்பட்டவையும் எல்லா உலகங்களிலும் பிரசித்தமானவையும் ஆகிய நாமங்களால் துதிக்கத் தக்கவரை துதிக்கிறேன்(25)
இவை மஹான்களால் போற்றப்பட்டவை. ஸத்யமானவை. சித்தயளிப்பவை. எல்லா கார்யங்களையும் சாதிப்பவை. வேதத்தில் ஊன்றிய உள்ளம் படைத்த தண்டி மஹரிஷியால் பக்தியுடன் அருளப்பட்டவை. (26)
உண்மையுணர்ந்த முனிவர்களாலும் ஸாதுக்களாலும் உள்ளபடி உணர்த்தப்பட்டுப் பிரசித்தமான அந்நாமங்களால் சிறந்தவரும் முதல்வரும் சுவர்க்கத்தை அளிப்பவரும் எல்லா உயிர்களுக்கும் நன்மை புரிபவரும் மங்கள வடிவினருமான அவரை துதிக்கிறேன். (27)
*****
"ச்ருதை: ஸர்வத்ர ஜகதி ப்ரம்மலோகாவதாரிதை:|"
"ஸத்யைஸ்தத் பரமம் ப்ரஹ்மப்ரோக்தம் ஸநாதனம்| வக்ஷ்யே யதுகுல ச்ரேஷ்ட ச்ருணுஷ்வாவஹிதோ மம||" (28)
"வரயைனம் பவம் தேவம் பக்தஸ்த்வம் பரமேஸ்வரம்| தேன தே ச்ராவயிஷ்யாமி யத்தத் ப்ரஹ்ம ஸ்நாதனம் ||" (29)
"ந சக்யம் விஸ்தராத் க்ருத்ஸ்னம் வக்தும் சர்வஸ்ய கேநசித்| யுக்தேனாபி விபூதீனா மபி வர்ஷசதைரபி||" (30)
பொருள்:-
யதுகுல ச்ரேஷ்டரே, ப்ரம்ம லோகத்திலிருந்து இவ்வுலகிற்கு இறங்கியவையும் வேதத்தில் எங்கும் உறைபவையும் ஸத்தியமானவையுமான நாமங்களால் ப்ரம்மாவால் போற்றப்பட்ட பிரம்மமாகிய அப்பரம்பொருளைப் போற்றுகிறேன். ஒருமைப்பட்ட மனதுடன் என்னிடமிருந்து கேட்பீராக (28)
உலகின் தோற்றுவாயும் தேவதேவனும் ஆகிய இந்த பரமேஸ்வரனை பக்தராகிய நீர் ஆராதனை செய்யும். அதற்காக உமக்கு ஸநாதன ப்ரம்மாவாகிய இதை ச்ரவணம் செய்விக்கிறேன். (29)
எல்லாப் பொருமைகளும் வாய்ந்தவராயினும் எவராலும் சிவனுடைய பெருமை முழுவதையும் விரிவாக நூறு வருஷங்களில் கூட சொல்ல இயலாது. (30)
*****
"யஸ்யாதிர் மத்த்ய ம(அ)ந்தஞ் ச ஸுரைரபி ந கம்யதே| கஸ்தஸ்ய சக்னுயாத் வக்தும் குணான் கார்த்ஸ்ன்யேன மாதவ||" (31)
"கிம் து தேவஸ்ய மஹத: ஸம்ஷிப்தார்த்த பதாக்ஷரம்| சக்திதச்சரிதம் வஷ்யே ப்ரஸாதாத் தஸ்ய தீமத:||" (32)
"அப்ராப்ய து ததோனுஜ்ஞாம் ந சக்ய: ஸ்தோதுமீஸ்வர:| யதா தேனாப்யனுஜ்ஞாத: ஸ்துதோ வை ஸ ததா மயா||" (33)
"அனாதிநிதனஸ்யாஹம் ஜகத்யோநேர் மஹாத்மன:| நாம்னாம் கஞ்சித் ஸமுத்தேச்யம் வஷ்யாம் யவ்யக்த யோநிந:||" (34)
பொருள்:-
மாதவா எவருடைய அடியும் முடியும் நடுவும் தேவர்களால் காண முடியவில்லையோ அவருடைய குணங்கள் முழுவதும் சொல்வதற்கு எவன் சக்தியள்ளவனாவான் (31)
என்றாலும் புத்திக்கு உறைவிடமான அவருடைய அருளால் அந்த மஹாதேவருடைய சரிதத்தை சுருக்கமாக பதங்களிலும் அஷரங்களிலும் என் சக்திக்கு இயைந்தபடி கூறுகிறேன் (32)
அவருடைய அனுக்ரஹத்தைப் பெறாமல் அந்த ஈஸ்வரனை துதிக்க இயலாது. எப்பொழுது அவருடைய அனுக்ரஹத்தை பெற்றேனோ அப்பொழுதே என்னால் அவர் துதிக்கப்பட்டார் (33)
உலகத்தில் உற்பத்தி ஸ்தானமும் தனக்கு உற்பத்தி ஸ்தானம் காணப்படாதவரும் , ஆதியந்தமில்லாதவரும் ஆகிய அம்மஹாத்மாவின் நாமங்களில் சிலவற்றை உத்தேசமாக கூறுகிறேன்.(34)
"வரதஸ்ய வரேண்யஸ்ய விஸ்வரூபஸ்ய தீமத:| ச்ருணு நாம்னாஞ் சயம் க்ருஷ்ண யதுக்தம் பத்மயோநினா||" (35)
"தசநாம ஸஹஸ்ராணி யான்யாஹ ப்ரபிதாமஹ:| தானி நிர்மத்ய மனஸா தத்னோ க்ருதமிவோத்த்ருதம்||" (36)
"கிரே: ஸாரம் யதா ஹேம புஷ்பசாரம் யதா மது| க்ருதாத் ஸாரம் யதா மண்டஸ்ததைதத் ஸாரமுத்ருதம்||" (37)
"ஸர்வபாபாபஹமிதம் சதுர்வேத ஸமன்விதம்| ப்ரயத்னேனாதி கந்தவ்யம் தார்யஞ் ச ப்ரயதாத்மனா||" (38)
"ஸர்பூதாத்ம பூதஸ்ய ஹரஸ்யாமித தேஜஸ:|அஷ்டோத்திர ஸஹஸ்ரம் து நாம்னாம் சர்வஸ்ய மே ச்ருணு|
யச்ச்ருத்வா மனுஜவ்யாக்க்ர ஸர்வான் காமானவாப்ஸ்யஸி||" (39)
பொருள்:-
வரமளிப்பவரும், சிறந்தவரும், விஸ்வரூபியும் புத்தியே வடிவாகியவரும் ஆன அவருடைய நாமங்களின் தொகுதி எவ்வாறு பிரம்மாவால் கூறப்பட்டுள்ளதோ அதைக் கேட்பீராக (35)
பிரம்மா கூறிய பத்தாயிரம் நாமாக்கள் எவையோ அவற்றை மனதால் கடைந்து தயிரிலிருந்து நெய்யை போல் இந்த ஸஹஸ்ரநாமம் எடுக்கப்பட்டதாகும் (36)
சுரங்கக் கனியின் ஸாரமான தங்கமும் புஷ்பத்தின் ஸாரமான தேனும் வெண்ணையில் ஸாரமான நெய்யும் எப்படியோ அப்படி ஸாரமான இது ஆராய்ந்தெடுக்கப்பட்டுள்ளது(37)
இது எல்லா பாவங்களையும் போக்குவது நாலு வேதங்களுடன் ஒன்றுபட்டது. முயற்சி செய்து அடையத்தககது. ஒருமைப்பட்ட மனத்தினால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது(38)
உயிர்களுக்கு எல்லாம் உயிராகியவரும் அளவு கடந்த வீரியம் படைத்தவரும் அனைத்தையும் தன்னிடம் ஈர்த்து கொள்வதால் ஹரன் எனவும் சர்வன் எனவும் பெயர் பெற்றவருமாகிய அவருடைய ஆயிரத்தெட்டு நாமாக்களை என்னிடமிருந்து கேட்பீராக. மனித உருக்கொண்டவர்களில் சிறந்தவரே! அதைக் கேட்பதால் எல்லா ஆசைகளின் பூர்த்தியையும் எய்துவீர்.(39)
பூர்வ பாகம் பாஷ்யம் முற்றிற்று
*****
ந்யாஸ:
"அஸ்ய ஸ்ரீ சிவஸஹஸ்ரநாம ஸ்தோத்ர - மஹா மந்த்ரஸ்ய| உபமன்யு ருஷி:| அனுஷ்டுப் சந்த:| ஸ்ரீ ஸாம்பஸதாசிவோ தேவதா||"
"ஸ்த்திர: ஸ்த்தாணுரிதி பீஜம்| ஸ்ரீமான் ஸ்ரீ வர்த்தனோ ஜகத் இதி சக்தி:| தேவாதிபதிரிதி கீலகம்| ஸ்ரீ ஸாம்ப ஸதாசிவ - ப்ரஸாத - ஸித்த்யர்த்தே ஜபே விநியோக:||"
பொருள்:-
சிவஸஹஸ்ரநாம ஸ்தோத்திரமாகிய
மஹாமந்திரத்திற்கு உபமன்யு ரிஷி: அநுஷ்டுப் சந்தம், ஸ்ரீ ஸாம்பஸதாசிவர் தேவதை. 'ஸ்த்திரஸ்த்தாணு' என்று பீஜம். 'ஸ்ரீமான் ஸ்ரீ வர்த்தனோஜகத்' என்று சக்தி; 'தேவாதிபதி:' என்று கீலகம். ஸ்ரீ ஸாம்பஸதாசிவருடைய திருவருள் சித்திக்கும் பொருட்டு ஜபத்தில் இதற்குப் பலன்.
த்யான ஸ்லோகம்:-
"சாந்தம் பத்மானஸ்த்தம் சசிதரமகுடம் பஞ்சவக்த்ரம் த்ரிநேத்ரம்
சூலம் வஜ்ரஞ்ச கட்கம் பரசு மபயதம் தஷபாகே வஹந்தம்|
நாகம் பாசஞ்ச கண்டாம் ப்ரலய ஹுதவஹம் ஸாங்குசம் வாமபாகே
நானாலங்கார யுக்தம் ஸ்படிகமணி நிபம் பார்வதீசம் நமாமி||"
பொருள்:-
சாந்த மூர்த்தியும் பத்மாசனத்தில் வீற்றிருப்பவரும், சந்திரகலையுடன் ப்ரகாசிக்கும் கிரீடங்கள் அணிந்தவரும், ஐந்து முகங்களையுடையவரும், மூன்று கண்களையுடையவரும், சூலம், வஜ்ரம், வாள், பரசு, அபய முத்திரை ஆகியவற்றை வலது புறமும், பாம்பு, பாசம், மணி, ப்ரளயாக்னி, அங்குசம் ஆகியவற்றை இடது புறமும் தரிப்பவரும் பலவிதமான அலங்காரம் உடையவரும் ஸ்படிகமணி போன்றவரும், ஆகிய பார்வதீசனை நமஸ்கரிக்கிறேன்.
லம் ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி|
ஹம் ஆகாசாத்மனே புஷ்பை: பூஜயாமி| யம் வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி| ரம் அக்ன்யாத்மனே தீபம் தர்சயாமி|
வம் அம்ருதாத்மனே அம்ருதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி|
ஸம் ஸர்வாத்மனே ஸர்வோபசாரபூஜாம் ஸமர்ப்பயாமி||
பொருள்:-
'லம்' என்ற பிருதிவி பீஜத்தால் பிருதிவி வடிவான வருக்கும் கந்தம் ஸமர்ப்பிக்கிறேன்.
'ஹம்' என்ற ஆகாச பீஜத்தால் ஆகாச வடிவானவரைப் புஷ்பங்களால் பூஜிக்கிறேன்.
'யம்' என்ற வாயு பீஜத்தால் வாயு வடிவானவருக்கு தூபம் காட்டுகின்றேன்.
'ரம்' என்ற அக்னி பீஜத்தால் அக்னி வடிவானவருக்கு தீபம் காட்டுகின்றேன்.
'வம்' என்ற அம்ருத பீஜத்தால் அம்ருத வடிவான வருக்கு அம்ருத மஹா நைவேத்தியத்தைத் தெரிவிக்கிறேன்.
'ஸம்' என்ற ஸர்வாத்ம பீஜத்தால் ஸர்வாத்மஸ் வரூபியை எல்லா உபசாரங்களாலும் பூஜிக்கின்றேன்.
திருச்சிற்றம்பலம் 🙏
Comments
Post a Comment