சிவ கீதை அத்தியாயம் 1 ஸ்லோகங்கள் 1-36 விளக்கத்துடன்
(சிவ பக்தியின் பெருமை - 36 ஸ்லோகங்கள்) சிவ பக்தி உத்கர்ஷன நிரூபணம். சிவ பக்தியோக மகிமை, சிவனின் பெருமை, சிவார்பணத்தின் பெருமையையும் விளக்கும் அத்தியாயம். வேத வியாசர், சூத முனிவர், அகஸ்தியர் போன்ற ரிஷிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.. சூதர் உவாச : "அதாதஸ்ஸம்ப்ரவஷ்யாமி சுத்த கைவல்ய முக்திதம்| அனுக்ரஹாந் மஹேசஸ்ய பவதுக்கஸ்ய பேஷஜம்||" (1) பொருள் : அத - சுபமான ஆரம்பத்தை குறிக்கும் சொல். சுத்த கைவல்ய முக்திதம் - சுத்த கைவல்ய முக்திதம் அளிப்பதும். பவதுக்கஸ்ய - சம்சாரம் எனும் துக்கத்திற்கு. பேஷஜம் - மருந்தும், சிவ கீதை எனும் ரத்னத்தை. மஹேசஸ்ய - சிவபெருமானுடைய அனுக்ரஹதாத் - அனுக்ரஹத்தால். ஸம்ப்ரவஷ்யாமி - நல்லபடியாக கூறுகிறேன். கருத்து : சுத்த கைவல்ய முக்தியை அளிப்பதும், சம்சாரம் எனும் துக்கத்துக்கு மருந்துமான சிவ கீதை எனும் ரத்தினத்தை சிவபெருமானுடைய அருளால் உங்களுக்கு கூறுகிறேன். விளக்கம் : நூல்கள் எழுதும்போதும் சரி, நல்ல விஷயங்களை, புராண இதிகாசகள் கூறும்போதும் சரி, மங்களமான சொல்லால் ஆரம்பிக்க வேண்டும். மங்கள ஸ்லோகங்களைச் சொன்னபிறகே இவற்றையெல்லாம் ஆரம்பிப்பது இன்னும் கடைபிடித்...